Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாத்துலயும் கேப்டன் பர்ஸ்ட்தான்.. என்ன கோவத்த மட்டும் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணா சரி!

பூனா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி 3 போட்டிகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இறுதிப்போட்டியில் அவுட்டாகாமல் 80 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் முதல் 50 வீரர்களில் 50க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள ஒரே வீரர் என்ற பெருமை விராட்டிற்கு கிடைத்துள்ளது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ளார்.

3 அரைசதங்கள்

3 அரைசதங்கள்

5 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களை விராட் கோலி அடித்துள்ளார். குறிப்பாக 5வது மற்றும் இறுதிப்போட்டியில் அவுட்டாகாமல் 80 ரன்களை அவர் குவித்தார். மேலும் இந்த தொடரின் இடையில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசையில் 5வது இடத்திற்கு கோலி முன்னேறியுள்ளார்.

டி20 போட்டிகளிலும் கவனம்

டி20 போட்டிகளிலும் கவனம்

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டிகளிலும் விராட் கோலி சிறப்பாகவே விளையாடினார். டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடிவரும் விராட் கோலி தற்போது டி20 போட்டிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் தனது ஆக்ரோஷத்தை மைதானத்தில் குறைத்து கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

50க்கும் மேற்பட்ட சராசரி

50க்கும் மேற்பட்ட சராசரி

இந்நிலையில் டி20 போட்டிகளில் முதல் 50 வீரர்களில் 50க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் அவரது ஸ்டிரைக் ரேட்டும் 139.04ஆக உள்ளது. சமீப காலங்களில் டி20 போட்டிளில் அவர் சிறப்பான ஆட்டத்தை அளித்துவருவதன் எதிரொலியாக இதை பார்க்கலாம்.

Story first published: Monday, March 22, 2021, 14:55 [IST]
Other articles published on Mar 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+