ஏன் இப்படி பண்ணீங்க? மேட்சிற்கு முன் கோலி பரபர முடிவு.. ஓரம்கட்டப்பட்ட தமிழக வீரர்.. என்னாச்சு?
சிட்னி; ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கியமான வீரரான அஸ்வின் இடம்பெறவில்லை. இதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதையடுத்து இன்று இரண்டு அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகும் வகையில் இன்று இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

பேட்டிங்
இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கி நிதானமாக ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கியமான வீரரான அஸ்வின் இடம்பெறவில்லை. இதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இல்லை
இன்று இந்திய அணியில் ஒரு ஸ்பின் பவுலர் கூட இடம்பெறவில்லை. கடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் இடப்பெற்று இருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மொத்தமாக இன்று அஸ்வின் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.

ஏன் இப்படி
கோலி எடுத்த இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் கூட அஸ்வினை இப்படி ஓரம்கட்டினால் என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த வாரம் இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் நடக்க உள்ளது.

தொடர்
இதில் கலந்து கொள்ள போகும் சில வீரர்களுக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புஜாரா, கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அஷ்வினுக்கும் இதனால்தான் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இவர்கள் உறுதியாக ஆடுவார்கள் என்பதால் மூன்று பேருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பும்ரா
அதே சமயம் பும்ரா, ஷமிக்கு போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்கு இவர்கள் தயாராக வேண்டும் என்பதால் இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி 20 தொடரில் 3 போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications