Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs AFG A: வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்.. இந்தியாவை வீழ்த்தியது.. எமர்ஜிங் ஆசிய கோப்பை அரை இறுதி

அல் அமீரத்: 2024 எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது அரை இறுதியில் இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது.

எமர்ஜிங் ஆசிய கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் ஏ அணி அதிரடியாக ஆடியது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் அசுர வேகத்தில் ரன் சேர்த்தனர்.

afghanistan india

துவக்க வீரர்கள் ஜுபாயத் அக்பரி 41 பந்துகளில் 64 ரன்களும், செடிகுல்லா அடல் 52 பந்துகளில் 83 ரன்களும் சேர்த்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய கரீம் ஜன்னத் 20 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அதன் பின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

மொத்தம் 11 சிக்ஸ் மற்றும் 16 ஃபோர் அடித்து இருந்தது அந்த அணி. இந்திய அணியின் பந்துவீச்சில் ரஷிக் சலாம் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். அதிக ஐபிஎல் அனுபவம் உள்ள ராகுல் சாகர் 3 ஓவர்களில் 48 ரன்கள் விட்டு கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

அதேபோல ஆகிப் கான் 4 ஓவர்களில் 48 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 3 ஓவர்களில் 40 ரன்களையும் விட்டுக் கொடுத்து இருந்தனர். இந்தியா ஏ அணிக்கு 207 ரன்கள் என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய இந்தியா ஏ அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.

பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களும், அபிஷேக் சர்மா 7 ரன்களும், திலக் வர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின் ஆயுஷ் பதோனி 31 ரன்கள், நெஹால் வதேரா 20 ரன்கள் எடுத்தனர். நிஷாந்த் சிந்து 13 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். ரமன்தீப் சிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். அவர் 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார்.

ரமன்தீப் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்ற போதும் இந்திய அணியால் வெற்றி இலக்கை நெருங்கக் கூட முடியவில்லை. இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அபாரமாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்த ஆப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் இறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோத உள்ளன.

Story first published: Friday, October 25, 2024, 23:17 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+