Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல்.. என் பீல்டிங் பற்றியா பேசுறீங்க? விமர்சகர்களுக்கு பதிலடி

தம்புள்ளா: ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில், 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி காற்றில் பறந்து பிடித்த அசாத்திய கேட்ச், பலரையும் மிரள வைத்தது. 2026 ஐபிஎல் தொடரில் அவரது பீல்டிங் திறமை குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தம்புள்ளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 5வது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் காலித் தனிவால் அடித்த பந்து மின்னல் வேகத்தில் சென்றது. அப்போது 30 யார்டு வட்டத்திற்குள் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, பந்தைக் கையில் பிடித்து முதல் முயற்சியில் தவறவிட்டாலும், உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு காற்றில் முழு நீளத்திற்குப் பாய்ந்து (டைவ் அடித்து) 2வது முயற்சியில் அபாரமாகக் கேட்ச் பிடித்தார். கீழே விழுந்ததில் அவரது வயிற்றுப் பகுதியில் லேசான அசௌகரியம் ஏற்பட்ட போதிலும், அவர் கேட்ச்சை வெற்றிகரமாக முடித்தார். இந்த கேட்ச் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் தனிவால் 13 ரன்களில் அவுட்டானார்.

IND A vs AFG A Vaibhav Suryavanshi s Stunning Dive Catch Silences Critics as India A Dominate Afghanistan A

முன்னதாக, டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 'ஏ' அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக 58 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷி, இப்போட்டியில் பேட்டிங்கிலும் மீண்டு வந்து 38 ரன்கள் எடுத்தார்.

பின்னர் மிடில் ஆர்டரில் கேப்டன் திலக் வர்மா (59) மற்றும் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா (58) ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது.

வைபவ் சூர்யவன்ஷியுடன் மோதிய இலங்கை வீரருக்கு தண்டனை.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை

வைபவ் சூர்யவன்ஷியுடன் மோதிய இலங்கை வீரருக்கு தண்டனை.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை

320 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.1 ஓவர்களில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் ஹசன் ஐசகில் 14 ரன்களிலும், கேப்டன் இம்ரான் மிர் 32 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். வைபவ்வின் இந்த அசாத்திய கேட்ச் மற்றும் இந்தியாவின் துல்லியமான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Story first published: Wednesday, June 17, 2026, 15:55 [IST]
Other articles published on Jun 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+