Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs AUS A: கோலியின் எதிரி அதிரடி சதம்.. தடுமாறிய இந்திய பவுலிங்.. ஸ்ரேயாஸ் மீண்டும் ஏமாற்றம்

லக்னோ: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஏ அணி இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளையும் மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய ஏ அணியில் ஷாம் கோன்ஸ்டாஸ், கூப்பர் கோன்லி, ஜோஸ் பிலிப்ஸ் போன்ற நட்சத்திர இளம் வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர், துருவ் ஜூரல், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, லிட்டன் தாஸ் ஆகிய வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்று வரும் முதல் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ind A vs Aus A

ஆஸ்திரேலிய ஏ அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் கேம்பேல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் வம்பிழுத்த சாம் கோன்ஸ்டாஸ் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரன்களை சேர்த்தார்.

144 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரி, மூன்று சிக்சர் என 109 ரன்களை குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 75 ஆகும். இது போன்ற கேம்பல் 88 ரன்கள் குவிக்க நடு வரிசையில் கூப்பர் 70 ரன்களும், லியம் ஸ்காட் 81 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜோஸ் பிலிப் 87 பந்துகளை எதிர் கொண்டு 123 ரன்கள் குவித்தார்.இதில் 18 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி 98 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 16 ஓவர்கள் வீசி 86 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. கலில் அகமத் 15 ஓவர்கள் வீசி 80 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய பவுலர்கள் அனைவருமே ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட ஐந்து ரன்களை வழங்கி வள்ளலாக இருந்திருக்கிறார்கள். இதை அடுத்து இந்திய ஏ அணி பேட்டிங் செய்தது. இதில் அனுபவ வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் 44 ரன்களிலும், தமிழக வீர நாராயண ஜெகதீசன் 64 ரன்கள் எடுத்தனர். அதேபோன்று மற்றொரு நட்சத்திர வீரரான சாய் சுதர்சன் 124 பந்துகளை எதிர் கொண்டு 73 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் 13 பந்துகளை எதிர் கொண்டு வெறும் எட்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். தற்போது டேவுதட் படிக்கலும் துரல் ஜூரலும் சேர்ந்து இந்திய ஏ அணியை சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர். தற்போது 74 ஓவர் முடிவில் இந்தியா ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்து வருகிறது. ஸ்ரேயாஸ் தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது இந்திய அணியில் அவர் மீண்டும் திரும்பும் வாய்ப்பை குறைத்துள்ளது.

Story first published: Thursday, September 18, 2025, 15:34 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+