களத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. உணவில் குறையா? பிசிசிஐ விளக்கம்
மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஏ அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணியும் வென்றது.
இதன் மூலம் இந்திய அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹென்றி உள்ளிட்ட வீரர்கள் சிலர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதை அடுத்து ஆஸ்திரேலியா வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கெட்டுப் போன உணவு வழங்கப்பட்டது தான் இதற்கு காரணம் என்று புகார் இருந்துள்ளது. எனினும் இது தொடர்பாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜூவ் சுக்லா ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில் உணவில் எந்த ஒரு குறையும் இல்லை. அப்படி கெட்டுப்போன உணவு வழங்கியிருந்தால், அனைத்து வீரர்களுக்குமே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும். இந்திய வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பார்கள். ஏனென்றால் அனைவருக்கும் ஒரே உணவு தான் வழங்கப்படுகிறது. இது வேற ஏதேனும் பிரச்சனையாக இருந்திருக்கும்.
நாட்டில் உள்ள சிறந்த ஹோட்டல்களில் இருந்து தான் வீரர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஹோட்டல் லேண்ட்மார்க்கில் தான் ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் உணவு தரப்பட்டது. அனைவரும் ஒரே உணவை தான் சாப்பிட்டார்கள். ஆனால் சில வீரர்களுக்கு மட்டும்தான் உடல் நல குறைவு ஏற்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் அதை நாங்கள் பத்திரமாக கையாண்டு வருகிறோம் எங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முன்னொரு அறைகள் வேண்டும். ஆனால் எங்களுக்கு அந்த அளவுக்கு போது ஹோட்டல்களும் இல்லை. அது மட்டும் இல்லாமல் கான்பூரில் சர்வதேச விமான நிலையமும் இல்லை. இதனால் வீரர்கள் செல்வதற்கு கொஞ்சம் சிரமம் இருந்திருக்கலாம் மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications