Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங்கின் மற்றொரு சிஷ்யன் செய்த சம்பவம்.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 68 பந்துகளில் சதம்

கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் தம் விளையாடிய காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் யுவராஜ் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்களை வழிநடத்தி வருகிறார்.

இளம் வீரர்களுக்கு மென்டராக உள்ள அவர் அவர்களின் பேட்டிங்கை மெருகேற்றி வருகிறார். ஏற்கனவே அவர்களுடைய சிஷ்யனான அபிஷேக் ஷர்மா, சர்வதேச t20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

Prabhsimran singh

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தற்போது பட்டையை கிளப்பி வருகிறார். அபிஷேக் ஷர்மா போல் பிரப்சிம்ரன் சிங்கும், யுவராஜ் சிங்கிடம் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய ஏ அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் கான்பூரில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 316 ரன்கள் குவித்தது.

317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் பிராப்சிம்ரன் சிங் விளையாடினர். இதில் அபிஷேக் சர்மா 22 ரன்களில் ஆட்டம் இழக்க, பிராப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எட்டு பவுண்டரி, ஏழு சிக்ஸர் என 68 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.

இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 ஆகும். இந்திய ஏ அணி 145 ரன்கள் எடுத்திருந்த போது அவர் மட்டும் தனியாக 102 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ், திலக் ஆகியோர் அரை சதம் அடிக்க இந்திய ஏ அணி 46 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பிராப்சிம்ரன் சிங் ஆடிய ஆட்டம் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 25 வயதான பிராப்சிம்ரன் சிங், இந்திய சீனியர் அணியில் விரைவில் இடம் பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் 56 ரன்களும் எடுத்து இருந்தார்.

Story first published: Monday, October 6, 2025, 12:50 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+