Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs ENG A: ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன் சொதப்பல்.. இங்கிலாந்து ஏ அணி அபாரம்

கெட்பேரி: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புது சைக்கிள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஒருநாள், டி 20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் தடுமாறி வருகிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக இருக்கின்றார்.

Ind a vs Eng a

அதில் முதல் படியாக இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் சீனியர் அணியில் இடம் பிடிக்க கூடிய வீரர்கள் பலரை தேர்வு குழு ஏ அணியுடன் அனுப்பி வைத்திருக்கிறது.

இதன் மூலம் இந்த தொடரில் விளையாடி இங்கிலாந்து தொடருக்கு நல்ல பயிற்சியை எடுத்துக் கொள்ள முடியும். இங்கிலாந்து களச் சூழல், இங்கிலாந்து தட்ப வெப்பம் ஆகியவற்றுக்கு இந்த இளம் வீரர்கள் பழக முடியும். அதன்படி இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், சர்துல் தாக்கூர், நிதீஷ்குமார் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த ஆறு வீரர்களுமே இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருக்க கூடியவர்கள். இவர்களை தவிர சர்பராஸ் கான், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். ருதுராஜ் இன்னும் காயம் சரியாகாததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன் அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் இரண்டு பௌண்டரிகளை எடுத்த நிலையில் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 20 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 61 எடுத்து இருக்கிறது.

Story first published: Friday, May 30, 2025, 17:12 [IST]
Other articles published on May 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+