Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது எல்லாம் அப்பட்டமான ஏமாற்று வேலை.. சாய் சுதர்சனுக்கு நடுவர் தவறான அவுட்.. பைனலில் பாக். ஆதிக்கம்

கொழும்பு : இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் சாய் சுதர்சனுக்கு கள நடுவர் தவறாக அவுட் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் நிறைந்த பாகிஸ்தானும் முற்றிலும் இளம் படையை கொண்ட இந்திய அணியும் பல பரிட்சை நடத்தியது.

Ind a vs Pak a Final - sai sudharsan became victim of umpire wrong decision

இதில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தயாப் தாஹிர் 108 ரன்களை குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான அணி 352 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணியின் இளம்படை களம் கண்டது.

தமிழக சிங்கம் சாய் சுதர்சன், அபிஷேக் ஷர்மாவும் அபாரமாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினர். எனினும் அப்போதுதான் அந்த சர்ச்சை சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் 8.3 வது ஓவரில் சாய் சுதர்சனுக்கு நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் அந்தப் பந்தை வீசிய அர்சத் கிரீசை தாண்டி காலை வைத்து நோபால் வீசியது தெளிவாக ரிப்ளேவில் தெரிந்தது. எனினும் டிஆர்எஸ் உள்ளிட்ட எந்த வசதியும் இந்த தொடரில் இல்லாத காரணத்தால் இந்த தவறை சரி செய்ய முடியவில்லை. இது இந்திய அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Ind a vs Pak a Final - sai sudharsan became victim of umpire wrong decision

மேலும் முக்கியமான கட்டத்தில் இதுபோன்று நடுவர்கள் தவறான முடிவ அளிப்பது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுவதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது நோபாலா இல்லையா என்று கூட பார்க்காமல் நடுவர் செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை ஹர்மன் பிரிக் கவுர் வங்கதேச நடுவர்கள் மீது குற்றச்சாட்டிய நிலையில் தற்போது இந்திய அணியின் இளம் படையினருக்கும் இலங்கையில் அதே நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, July 23, 2023, 21:31 [IST]
Other articles published on Jul 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+