Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs Pak: இப்படிலாமா ஏமாற்றுவாங்க.. இந்திய வீரருக்கு எதிராக தவறாக அவுட் வழங்கிய நடுவர்

மும்பை: ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் கத்தாரில் உள்ள தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்ற நிலையில் தற்போது பாகிஸ்தான் ஷாகின்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி பலப்பரிட்சை நடத்தியது.

குரூப் பி ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் வழக்கம் போல் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார்.

Ind vs pak

மறுமுனையில் பிரியான்ஸ் ஆர்யா 10 ரன்களில் வெளியேற வைபவ் சூர்யவன்சி 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து மூன்று சிக்சர் அடங்கும். மூன்றாவது வீரராக விளையாடிய நமன் தீர் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க நடுவரிசை வீரர்களான கேப்டன் ஜித்தேஷ் சர்மா ஐந்து ரன்களிலும், நேஹல் வதேரா 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பெயர் பெற்ற ஆஸ்டோஷ் சர்மா 6 பந்துகள் எதிர்கொண்டு சாட் மசூத் பந்துவீச்சில், பந்து அவரது காலில் பட்டாலும் ஸ்டெம்புக்கும் காலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஆனால் இதற்கு நடுவர் அவுட் வழங்கி விட்டார். இதனால் இந்த விக்கெட்டை பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடினர்.ஆனால் இது அவுட்டே கிடையாது என்பதால் அப்படியே அதிர்ச்சியாக ஆஷ்டோஷ் சர்மா நின்றார்.

அதேபோன்று ரமந்திப் சிங் 11 ரன்களிலும் ஹார்ஸ் டுபே 19 ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய ஏ அணி 19 ஓவர் முடிவில் 136 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஷ்டோஸ் சர்மாவுக்கு நடுவர் வழங்கிய இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் சாகின்ஸ் பந்துவீச்சு தரப்பில் அதிகபட்சமாக சாகித் அசிஸ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சாட் மசூத் மற்றும் மாஸ் சதாகத் தலா இரண்டு விக்கெட் களையும் கைப்பற்றி இருந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் ஷாகின்ஸ் பேட்டிங்கில் அபாரமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் மாஷ் சத்காத் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 13.2 ஓவரில் பாகிஸ்தான் ஷாகின்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

Story first published: Sunday, November 16, 2025, 23:06 [IST]
Other articles published on Nov 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+