Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஏ அணி திரில் வெற்றி.. மானத்தை காப்பாற்றிய சிஎஸ்கே பவுலர்.. சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட்

பெங்களுர்: தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு இடையிலான முதல் நான்கு நாட்கள் கொண்ட இந்திய ஏ அணி திரில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.

பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் எடுத்தது.

Ind A vs SA A 1st Unofficial Test

இதனை எடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 75 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த தென்னாப்பிரிக்க ஏ அணி இரண்டாவது இன்னிங்சில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

இதில் தொடக்க வீரராக விளையாடிய சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆயுஸ் மாத்ரே ஆறு ரன்களிலும், தேவுதட் படிக்கல் ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாற ரஜத் பட்டிதார் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஜத் பட்டிதார் 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் பண்ட் அரைசதம் அடித்து களத்தில் நின்றார்.

119 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி கடைசி ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய ஏ அணியில் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்த நிலையில் ஆட்டம் பரபரப்பான நிலையில் சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 113 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதில் 11 பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும். இதே போன்று ஆயுஷ் பதோனி 34 ரன்களில் ஆட்டம் இழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றுக் கொண்டது. எனினும் கீழ் வரிசை வீரர்களான தனுஷ் கோட்டியான் 23 ரன்களும் மனவ் சுதர் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் சிஎஸ்கே அணியின் பவுலரான அன்சூல் காம்போஜ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளை எதிர் கொண்டு 37 ரன்கள் சேர்த்தார்.

இதில் நான்கு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இரு இன்னிங்ஸ்களிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய தனுஷ் கோட்டியான் ஆட்டநாயகன் விருது வென்றார். இரு அணிகளுக்கு மேலான இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் வரும் ஆறாம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.

Story first published: Sunday, November 2, 2025, 14:31 [IST]
Other articles published on Nov 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+