Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs SA A டெஸ்ட் போட்டி நேரலை.. களத்திற்கு திரும்பிய ரிஷப் பண்ட்..தென்னாப்பிரிக்கா ரன் குவிப்பு

பெங்களூர்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஏ அணியில் கேப்டனாக ரிஷப் பன்ட் திரும்பி இருக்கின்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், பண்ட் தொடரை விட்டு வெளியேறி இருந்தார்.

Ind A vs SA A-

இந்த நிலையில் மூன்று மாதத்திற்கு பிறகு பண்ட், தற்போது கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிருக்கிறார். இந்த இந்திய ஏ அணியில் ரிஷப் பண்ட் உடன் சாய் சுதர்சன், தேவுதட் படிக்கல், ரஜத் பட்டிதார், ஆயுஸ் பதோணி ஆயுஸ் மாத்ரே, அன்சூல் காம்போஜ், கலில் அஹமத் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க ஏ அணியில் லெசிகோ 7 பந்துகளில் அன்சூல் கம்போஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜார்டன் மற்றும் ஜுபைர் ஹம்சா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் ஜார்டன் 76 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். ஜுபைர் 83 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கின்றார். தற்போது மதியநேர உணவு இடைவெளியின் போது தென்னாபிரிக்க ஏ அணி 27 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த போட்டி ஜியோ ஹாட்ஸ்டார் இல் நேரலை செய்யப்படுகிறது. இதன் காரணமாக பண்ட் ரசிகர்கள் அவரை நீண்ட நாட்களுக்கு பார்க்க போகிறோம் என்று உற்சாகத்தில் உள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியில் ராகுல், சிராஜ் உள்ளிட்ட ஸ்டார்கள் திரும்புகின்றனர்.

Story first published: Thursday, October 30, 2025, 12:20 [IST]
Other articles published on Oct 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+