Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs SA A: ருதுராஜ் அபார சதம்.. தனி ஆளாக நின்று தென்னாப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தனார்

மும்பை: தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணியில் நட்சத்திர வீரர் ருதுராஜ் அபாரமாக சதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்ம் ராஞ்சியில் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணியில் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் அந்த அணியின் டியான் ஃபாரஸ்டர் மற்றும் டினோ போடிகிட்டர் ஆகியோர் அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்க ஏ அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

Ruturaj Gaikwad

இதில் டியான் ஃபாரஸ்டர் 77 ரன்களும் டிலானோ போட்டிகிட்டர் 90 ரன்களும் இறுதியில் பிஜோன் போர்ட்டின் 59 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்க ஏ அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய ஏ அணியின் பந்துவீச்சில் ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்சித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ருதுராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். வழக்கம் போல் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆட முற்பட்டார். 4 பவுண்டரி,ஒரு சிக்சர் என 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டம் இழக்க ருதுராஜ் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் நெருக்கடி கொடுத்தும் ருதுராஜ் கொஞ்சம் கூட அசரவில்லை. ருதுராஜ் அரை சதம் கடந்து நிதானமாக விளையாட கேப்டன் திலக் வர்மா 58 பந்துகளில் 39 ரன்களும், இசான் கிஷன் 21 பந்துகளில் 17 ரன்களும் எடுத்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ருதுராஜ் நங்கூரம் போல் நின்று ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.

ஒரு கட்டத்தில் அவர் 117 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். இந்த கட்டத்தில் நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதேபோன்று முன்னாள் சிஎஸ்கே வீரர் நிஷாந்த் சிந்து 26 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க ஹர்சித் ரானா இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 49.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, November 13, 2025, 23:05 [IST]
Other articles published on Nov 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+