Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND A vs SA A: 16 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்த தென்னாப்பிரிக்கா ஏ அணி.. இறுதியில் மாறிய கதை.. இலக்கு என்ன?

மும்பை: இந்திய ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க ஏ அணி 286 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் திலக் வர்மா தலைமையில் இந்திய ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, இசான் கிஷன், ரியான் பராக் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் பங்கு பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் வீசிய பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

Ind a vs sa a

குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங் தென்னாபிரிக்க ஏ அணியின் தொடக்க வீரர்களான ரூபின் ஹெர்மானை டக்அவுட் ஆக்கினார். இதேபோன்று ரெனால்ட் முனுசாமியை 10 ரன்களில் ஆட்டம் இழக்க வைத்தார். டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய ஜோர்டன் ஹேர்மன் ரன் ஏதும் எடுக்காது.

இந்த நிலையில் திலக் வர்மாவால் ரன் அவுட் ஆக்கப்பட்டார். இதனால் தென்னாப்பிரிக்க ஏ அணி 16 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரிசையில் களமிறங்கிய சீனிட்டெம்பா 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் தடுமாறியது.

அப்போது ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டியான் போர்ஸ்டட் மற்றும் டிலானோ போடிகிட்டர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். டியான் 4 போர்ஸ்டர் 83 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.

சிறப்பாக விளையாடிய டில்லான போட்கீட்டர் 105 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அதேபோன்று இறுதியில் களமிறங்கிய பிஜான் போர்ட்டீன் 56 பந்துகளில் 59 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க ஏ அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ. அணி பந்துவீச்சில் ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித்ரானா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் இந்திய ஏ அணி எட்டு பவுலர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 13, 2025, 18:17 [IST]
Other articles published on Nov 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+