Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிறந்தநாளன்று அடித்த "யோகம்".. துள்ளிக் குதிக்கும் இஷான் கிஷன் - டிராவிட்டே காரணம்

கொழும்பு: இலங்கைக்கு அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ள இஷான் கிஷனுக்கு இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது.

Recommended Video

Prithvi Shaw and Ishan Kishan played career best innings | Oneindia Tamil

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜுலை 18) கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

பலமான அணி

பலமான அணி

இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இலங்கைக்கு அனுப்பி இருந்ததால், பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் ஒரு பலமான அணியை கோச் ராகுல் டிராவிட், கேப்டன் ஷிகர் தவான் இணைந்து தேர்வு செய்துள்ளனர்.

2 ஃபாஸ்ட்

2 ஃபாஸ்ட்

அதன்படி, இந்திய அணியில் ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, இஷான் கிஷன் (w), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி 2 ஃபாஸ்ட் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. வேகப்பந்துவீச்சில் இருவர் மட்டும் இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் பந்துவீசுவார் என்று தெரிகிறது.

23வது பிறந்தநாள்

23வது பிறந்தநாள்

இதில் சுவாரஸ்யம் என்னவெனில், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக, இஷான் கிஷானுக்கு இன்று 23வது பிறந்தநாளாகும். தனது பிறந்தநாள் அன்றே இந்திய அணிக்கான ஒருநாள் டீமில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு முன் யார்?

இதற்கு முன் யார்?

இதன் மூலம், இந்திய ஒருநாள் அணியில், தனது பிறந்தநாள் அன்று அறிமுகமான இரண்டாவது வீரர் எனும் பெருமையை இஷான் கிஷன் பெறுகிறார். இதற்கு முன்னதாக 1990ம் ஆண்டு, குர்ஷரன் சிங் என்ற இந்திய வீரர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது பிறந்தநாளன்று முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 27.

Story first published: Sunday, July 18, 2021, 15:51 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+