Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 முத்தரப்பு தொடர்.. இந்திய அணியில் டிராவிட் மகனுக்கு வாய்ப்பு.. 14 வயது வைபவ் அணியில் இல்லை

மும்பை: அண்டர் 19 கிரிக்கெட்டில் புயல் போல் நுழைந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார் பீகாரைச் சேர்ந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் 35 பந்துகளில் சதம், ஆஸ்திரேலிய மண்ணில் சதம், இங்கிலாந்து மண்ணில் சதம் என பட்டையை கிளப்பி வருகிறார் வைபவ்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்வதற்காக பிசிசிஐ தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் அண்டர் 19 கிரிக்கெட் அணியை வைத்து ஒரு முத்தரப்பு தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Ind U19 Tri series

அதன்படி வரும் நவம்பர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை பெங்களூரில் இந்த தொடர் நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய அண்டர் 19 ஏ மற்றும் இந்தியா அண்டர் 19 பி என இரண்டு அணிகள் பங்கு பெற உள்ளது. மூன்றாவது அணியாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் நட்சத்திர வீரருமான ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் பல்வேறு சாதனைகளைப் படைத்த வைபவ் சூர்யவன்சி இந்த அணியில் இடம் பெறவில்லை. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதேபோன்று சிஎஸ்கே அணியின் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேக்கும் இடம் தரப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் ராகுல் டிராவிட் மகன் என்பதால் வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, 14 வயது வீரர் சூரியவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, இதற்கு விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ ஆயுஸ் மாத்ரே மற்றும் வைபவ் சூரியவன்சி பெயரை நாங்கள் பரிசீலிக்கவில்லை. காரணம் இதே காலகட்டத்தில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஓமனில் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை நடைபெறுகிறது. இதில் வைபவ் சூர்யவன்சி இடம் பெற்றுள்ளார். இதேபோன்று ஆயுஷ் மாத்ரே ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவர் பெயரும் இதில் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளது.

இந்தியா U19 A அணி: விஹான் மல்ஹோத்ரா (கே) (PCA), அபிக்யான் குந்து (துணைக் கே & WK) (MCA), வாஃபி கச்சி (HYD CA), வன்ஷ் ஆச்சார்யா (SCA), வினீத் வி.கே (TNCA), லக்ஷ்ய ரைச்சந்தானி (CAU), ஏ. ராபோல் (WK) (HYD CA), கனிஷ்க் சௌஹான் (HAR), கிலான் ஏ படேல் (GCA), அன்மோல்ஜீத் சிங் (PCA), முகமது இனான் (KCA), ஹெனில் படேல் (GCA), அஷுதோஷ் மஹிடா (BCA), ஆதித்ய ராவத் (CAU), முகமது மாலிக் (HYD CA)

இந்தியா U19 B அணி: ஆரோன் ஜார்ஜ் (கே) (HYD CA), வேதாந்த் திரிவேதி (துணைக் கே) (GCA), யுவராஜ் கோஹில் (SCA), மௌல்யராஜ்சிங் சாவ்டா (GCA), ராகுல் குமார் (PCA), ஹர்வன்ஷ் சிங் (WK) (SCA), அன்வய் திராவிட் (WK) (KSCA), ஆர்.எஸ். அம்ப்ரிஷ் (TNCA), பி.கே. கிஷோர் (TNCA), நமன் புஷ்பக் (MCA), ஹெம்சுடேஷன் ஜே (TNCA), உதவ் மோகன் (DDCA), இஷான் சூட் (PCA), டி. தீபேஷ் (TNCA), ரோஹித் குமார் தாஸ் (CAB)

Story first published: Tuesday, November 11, 2025, 22:42 [IST]
Other articles published on Nov 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+