ஆஸ்திரேலிய அண்டர் 19 அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அண்டர் 19 அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி ஏற்கனவே ஒரு நாள் தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது டெஸ்ட் தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அண்டர் 19 அணி சாதனை படைத்திருக்கிறது.

மெக்காய் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அண்டர் 19 அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அலெக்ஸ் லீ அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்திருந்தார்.
இதை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் இந்திய வீரர்களும் தடுமாறினர். இன்னும் இந்திய வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அண்டர் 19 அணி 171 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
36 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அந்த அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் அல்லது இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் 29 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறியது.
இறுதியில் அலெக்ஸ் லீ 38 ரன்கள் எடுக்க அந்த அணி 116 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அண்டர் 19 அணி விளையாடியது. இதில் வைபவ் சூர்யவன்சி கோல்டன் டக்காக கேப்டன் ஆயுஸ் மாத்ரே 13 ரன்களிலும் விஹான் மல்கோத்ரா 21ரன்களும் விதாண்ட் டிரேவதி 33 ரன்களும் எடுக்க 12.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு இந்திய அண்டர் 19 அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் டெஸ்ட், ஒரு நாள் என அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அண்டர் 19 சாதனை படைத்திருக்கிறது.