13 வயது சூர்யவன்ஷி படைத்த சாதனை.. 21 ஆண்டுகளாக இருந்த ரெக்கார்ட் முறியடிப்பு.. இருப்பினும் சோகம்
மும்பை : 13 வயது கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை அண்மையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. சூரியவன்ஷி ஏற்கனவே அண்டர் 19 கிரிக்கெட்டில் சாதித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் அண்டர் 19 ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சூரியவன்ஷி 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் அண்டர் 19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி பங்கு பெற்றார். இதில் இந்திய அணி பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்கு எதிராக தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் களமிறங்கியது.

இந்த போட்டியில் சூர்யவன்ஷி பங்கு பெற்றார். இதன் மூலம் அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கு பெற்ற மிகவும் இளம் வீரர் என்ற பியூஸ் சாவ்லா 21 ஆண்டுகளுக்கு முன்பு படைத்திருந்த சாதனையை தற்போது வைபவ் சூர்யவன்சி முறியடித்து இருக்கிறார். அண்டர் 19 ஒரு நாள் போட்டிகளில் தன்னுடைய 16 ஆவது வயதில் அறிமுகமானார்.
தற்போது சூர்யவன்ஷி 13 வயதில் அறிமுகமாகி அந்த ரெக்கார்டை முறியடுத்து இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் குமார் குஸ்கரா 15 வயது 30 நாளில் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார்.ஐபிஎல் தொடரில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன சூர்யவன்ஷி எப்படி விளையாடப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சூர்யவன்ஷி 9 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் 252 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிகில் குமார் என்ற வீரர் 67 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் தடுமாறினர்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை சாஷிப் கான் என்ற வீரர் 147 பந்துகளில் 159 ரன்கள் விளாசினார். இந்திய பந்துவீச்சில் சமத் நாகராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ஆயுஷ் மாத்ரே இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்திய அண்டர் 19 அணி டிசம்பர் இரண்டாம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications