Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

32 பந்தில் 82 ரன்.. 7 சிக்ஸர்கள் பறக்கவிட்ட அபிஷேக் சர்மா.. ஆப்கானிஸ்தானை பந்தாடி வென்ற இந்தியா

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அபிஷேக் சர்மாவின் அசுர வேக அதிரடி ஆட்டம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் துல்லியமான பந்துவீச்சால் இந்திய அணி 38 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை மிக எளிதாக எட்டிப் பிடித்தது.

IND vs AFG 1st T20 Abhishek Sharma s 82 off 32 helps India to 7-Wicket Win Over Afghanistan

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸை ரன் ஏதுமின்றி ஜஸ்பிரித் பும்ரா வெளியேற்றினார்.

தொடர்ந்து வந்த இப்ராஹிம் சத்ரான் 11 ரன்களிலும், செடிகுல்லா அடல் 13 ரன்களிலும், குல்பதின் நைப் 2 ரன்களிலும், தர்விஷ் ரசூலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளே முடிவதற்குள்ளேயே வெறும் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

இந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் அனுபவ வீரர் முகமது நபி ஆகியோர் இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ஒமர்சாய் 44 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம் முகமது நபி 27 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்து அணியை கௌரவமான ஸ்கோருக்கு உயர்த்தியது.

இறுதி ஓவர்களில் முகமது நபி மற்றும் ரஷித் கானை அடுத்தடுத்து வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங், தனது 4 ஓவர்களில் வெறும் 19 ரன்களை மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஒமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆனால், அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 22 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், டெல்லி மைதானத்தில் சிக்ஸர் மழையைப் பொழிந்தார்.

அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 42 ரன்கள் சேர்த்து சிறந்த ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை மிக விரைவாக உறுதி செய்தது. அசுர வேகத்தில் விளையாடிய அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து முகமது நபியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுடனும், திலக் வர்மா 3 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி வெறும் 13.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும், ஒமர்சாய் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வைபவ் சூர்யவன்ஷி இருக்கும்போது சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்.. ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் ஏமாற்றம்

வைபவ் சூர்யவன்ஷி இருக்கும்போது சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்.. ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் ஏமாற்றம்

இந்த அபார வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு இந்த வெற்றி சிறந்த துவக்கமாக அமைந்தது.

Story first published: Sunday, September 13, 2026, 22:35 [IST]
Other articles published on Sep 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+