Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது, இந்த சேனல், ஒடிடியில் தான் இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியை காண முடியும்

டெல்லி: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமின் போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக செயல்பட்டார்.

மழையினால் பயிற்சி சற்று தாமதமானாலும், வலை பயிற்சியில் அவர் முழு வேகத்துடன் பந்து வீசினார். கடந்த ஐபிஎல் தொடரில் தனது பந்தில் சிக்ஸர் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக பும்ரா வீசிய பந்துகள் கவனம் பெற்றன.

Ind vs AFG

சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது சொந்த நாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியாவே மைதானங்களை வழங்கி ஆதரவளித்தது. பெங்களூருவில் அவர்கள் தங்களின் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு எதிராக விளையாடினர். ஆனால், தற்போது இருதரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாக இந்தியாவை எதிர்கொள்கிறது.

IND vs AFG: பும்ராவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி.. வலைப் பயிற்சியில் சுவாரஸ்யம்

IND vs AFG: பும்ராவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி.. வலைப் பயிற்சியில் சுவாரஸ்யம்

இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு அதிகம் உள்ளது. ரஷித் கான், முகமது நபி, ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்ற முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் இங்கு சிறப்பாக விளையாடியுள்ளனர். மேலும், கடந்த 2023 உலகக் கோப்பையில் டெல்லியில் இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்ராஹிம் சத்ரான் தலைமையில் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி, டி20 போட்டிகளில் மிகவும் அபாயகரமான அணியாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியில் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி மீண்டும் இணைந்துள்ள நிலையில், ஆட்டக்காரர்களின் வரிசையை இறுதி செய்வதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, செப்டம்பர் 13 அன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது.முதல் டி20 போட்டி இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியை இந்தியாவில் ஃபேன் கோடு (FanCode) செயலி மற்றும் அதன் இணையதளத்தில் நேரலையாகக் காண முடியும்.

இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

IND vs AFG: இசான் கிஷனுக்கு காயம்.. பேட்டிங் பயிற்சியில் பந்து தாக்கியது.. முதல் டி20-யில் சந்தேகம்

Also Read

IND vs AFG: இசான் கிஷனுக்கு காயம்.. பேட்டிங் பயிற்சியில் பந்து தாக்கியது.. முதல் டி20-யில் சந்தேகம்

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), தர்விஷ் ரசூலி, நூர் உல் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், முகமது நபி, குல்பதின் நைப், நங்கெலியா கரோட்டே, அப்துல்லா அகமதுசாய், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது.

Story first published: Saturday, September 12, 2026, 13:57 [IST]
Other articles published on Sep 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+