Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG 2வது டி20 பிளேயிங் 11.. வருண் நீக்கம்.. இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி ஆடுவாரா?

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், இன்று (செப்டம்பர் 15) டெல்லியில் நடைபெறவுள்ள 2-வது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்வதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு சில முக்கிய சவால்கள் காத்திருக்கின்றன.

முதல் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன், ஷார்ட் பந்தை அவசரப்பட்டு தூக்கி அடித்து 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 2வது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது பெஞ்சில் உள்ள 15 வயது அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகக் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND vs AFG 2nd T20 Playing XI Sanju Samson or Vaibhav Suryavanshi 5th Bowler Dilemma for India Ahead of 2nd T20I

பேட்டிங் மட்டுமின்றி, 5-வது பந்துவீச்சாளர் தேர்விலும் இந்திய அணிக்கு சிக்கல் நீடிக்கிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி முதல் போட்டியில் 2 ஓவர்களில் 30 ரன்களையும், சிவம் துபே ஒரு ஓவரில் 21 ரன்களையும் வாரி வழங்கி ஏமாற்றினர். அபிஷேக் சர்மாவால் நீண்ட ஓவர்கள் வீச முடியாத சூழலில், ஆல்-ரவுண்டர்களின் பந்துவீச்சு செயல்பாடு அணி நிர்வாகத்தைக் கவலையடையச் செய்துள்ளது.

சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரது இடத்தில் ரவி பிஷ்னோய் களமிறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாஷிங்டன் சுந்தரை களமிறக்கவும் சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது.

IND vs AFG: 10 ரன்கள் எடுக்கவா சஞ்சு சாம்சனை தேர்வு செய்தீங்க? முகமது கையிப் சரமாரி கேள்வி

IND vs AFG: 10 ரன்கள் எடுக்கவா சஞ்சு சாம்சனை தேர்வு செய்தீங்க? முகமது கையிப் சரமாரி கேள்வி

இந்திய உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் / வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

ஆப்கானிஸ்தான் உத்தேச லெவன்: செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹக் பரூக்கி, நவீன்-உல்-ஹக்.

Story first published: Tuesday, September 15, 2026, 7:55 [IST]
Other articles published on Sep 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+