Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது தோனியை ஸ்டம்பிங் பண்ணிட்டாங்களா? அப்ப இந்தியாதான் உலகக்கோப்பை ஜெயிக்கும்! கிளம்பும் வதந்தி!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | DHONI STUMP OUT | ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இது தோனிக்கு 2வது முறை

சவுதாம்ப்டன் : இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனியை ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்கச் செய்தது ஆப்கானிஸ்தான்.

இதை வைத்து தற்போது புதிய வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. தோனி ஸ்டம்பிங் செய்து விட்டார்கள். அதனால், இந்தியா தான் உலகக்கோப்பை ஜெயிக்கும் என்பதே அந்த வதந்தி.

தோனி மோசமான ஆட்டம்

தோனி மோசமான ஆட்டம்

தோனி ஆப்கானிஸ்தான் போட்டியில் மிக மோசமாக பேட்டிங் ஆடினார். டெஸ்ட் போட்டி போல ஆடி வெறுப்பேற்றினார். அவரின் தீவிர ரசிகர்கள் தோனி இதோ அதிரடியாக ஆடுவார் என ஒவ்வொரு ஓவருக்கும் காத்திருந்து ஏமாந்தனர்.

ஸ்டம்பிங்

ஸ்டம்பிங்

ஒரு கட்டத்தில் 52 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஷித் கான் வீசிய பந்தை முன்னேறி அடிக்க வந்த தோனி, பந்து வந்த திசையை கணிக்கத் தவறினார். பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் தோனியை ஸ்டம்பிங் செய்தார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

தோனி ஆடிய ஆட்டம் ரசிகர்கள் இடையேயும், விமர்சகர்கள் இடையேயும் கடும் எதிர்வினையை உண்டாக்கியது. தோனி டெஸ்ட் போட்டி போல ஆடினார் என பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தீவிர தோனி ரசிகர்கள், புதிதாக ஒரு கதை கட்டி, தோனி ஸ்டம்பிங்கால் இந்தியா உலகக்கோப்பை வெல்லப் போகிறது என்ற வதந்தியை பரப்பினார்கள்.

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை தொடரில் தான் கடைசியாக தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அதுதான் தோனி முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தது.

இது 2வது முறை

இது 2வது முறை

ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டது இரண்டாவது முறையாகும். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் தோனி ஸ்டம்பிங் ஆகி இருக்கிறார். 2011 உலகக்கோப்பைக்குப் பின், 2019 உலகக்கோப்பை தொடரில் தான் இது நடந்திருக்கிறது.

அதே மாதிரி…

அதே மாதிரி…

இதை வைத்தே 2011இல் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்ட போது, இந்தியா உலகக்கோப்பை வென்றது. அதே போல இப்போதும் வெற்றி பெறும் என கதை கட்டி வருகிறார்கள். நம்பவும் முடியலை.. நம்பாம இருக்கவும் முடியலை!!

Story first published: Sunday, June 23, 2019, 2:21 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+