Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர் மேட்ச்!! அடித்து.. துவைத்து.. கதற விட்ட ஆப்கன்.. கடைசி ஓவர் வரை போராடி வென்ற இந்தியா!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | கதற விட்ட ஆப்கன், கடைசி ஓவர் வரை போராடி வென்ற இந்தியா!

சவுதாம்ப்டன் : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி கடைசி ஓவர் வரை சென்று, பரபரப்பை ஏற்படுத்தி, இந்திய அணியின் வெற்றியுடன் முடிந்தது.

இந்தியா பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும், பந்துவீச்சில் அசத்தியது. இந்திய அணியின் ஐந்து பந்துவீச்சாளர்களும் கலக்கினர். ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து முதல் அதிர்ச்சியை தொடங்கி வைத்தார். அடுத்து நிதானமாக ஆடிய ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதுவரை ரோஹித் சர்மாவை மட்டுமே விமர்சித்து வந்தனர் ரசிகர்கள்.

விஜய் ஷங்கர் கைவிட்டார்

விஜய் ஷங்கர் கைவிட்டார்

அடுத்து விஜய் ஷங்கர் வந்தார். அவர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வலுவான இந்திய அணி தடுமாறுவதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோலி சிறப்பாக ஆடி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் ஆட்டம்

டெஸ்ட் ஆட்டம்

அதன் பின் ஜோடி சேர்ந்த தோனி - கேதார் ஜாதவ் வழக்கம் போல டெஸ்ட் போட்டி போல மெதுவாக ஆடி வெறுப்பேற்றினர். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் திணறியதை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும், தோனி - ஜாதவ் உச்சகட்டமாக திணறினர்.

தோனி வம்பு

தோனி வம்பு

ஜாதவ் ஒரு கட்டத்தில் லேசாக வேகத்தை கூட்டினார். தோனி ரன் அடிக்கவே மாட்டேன். ஓடக் கூட மாட்டேன் என வம்பு பண்ணிக் கொண்டு களத்தில் நின்றார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிகம் ஒத்துழைக்கவில்லை என்றாலும், தோனி ஆடிய விதம் மோசமாக இருந்தது.

சுயநலம்

சுயநலம்

தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாதவ் கடைசி 5 ஓவர்களில் கூட நிதானம் காட்ட, ரசிகர்கள் அவர் அரைசதம் அடிக்க வேண்டி சுயநலமாக ஆடுகிறார் என விமர்சித்தனர். பண்டியா 7, ஷமி 1, குல்தீப் யாதவ் 1, ஜாதவ் 52 ரன்களில் கடைசி 5 ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஜீப் 1, அப்தாப் ஆலம் 1, நயிப் 2, நபி 2, ரஷித் கான் 1, ரஹ்மத் ஷா 1 விக்கெட் வீழ்த்தினர். அப்தாப் ஆலம் மட்டுமே ஓவருக்கு 7.7 ரன்கள் கொடுத்தார். மற்ற வீரர்கள் சிக்கனமாக ரன் கொடுத்து இருந்தனர்.

ஆப்கன் பேட்டிங்

ஆப்கன் பேட்டிங்

225 ரன்களை துரத்திய ஆப்கன் அணியில் நபி தவிர எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவுக்கு ரன் எடுக்கவில்லை. துவக்க வீரர்கள் ஜஜாய் 10, நயிப் 27 ரன்கள் எடுத்தனர். ரஹ்மத் ஷா 36, ஷஹிதி 21, அஸ்கார் ஆப்கன் 8, நஜிபுல்லா 21, ரஷித் கான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நபி போராட்டம்

நபி போராட்டம்

நபி கடைசி வரை போராடி 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார். 7 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், இளம் வீரர் இக்ரம் அலிகில் உடன் இணைந்து ஆடினார்.

அந்த விக்கெட்

அந்த விக்கெட்

அப்போதும் நிதானம் இழக்காமல் ஆடிய நபி, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் நபி ஆட்டமிழந்து ஆப்கன் அணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.

ஹாட்ரிக் விக்கெட்

ஹாட்ரிக் விக்கெட்

அப்போது தான் இந்தியா வெற்றி பெறும் என்ற எண்ணமே இந்திய ரசிகர்களுக்கு வந்தது. நபி ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே அப்தாப் ஆலம் பவுல்டு அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தில் முஜீப் விக்கெட்டை சாய்த்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் ஷமி. ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சு அசத்தல்

பந்துவீச்சு அசத்தல்

ஷமி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பும்ரா, சாஹல், பண்டியா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே முக்கிய காரணம். ஒரு ஓவரில் கூட தேவையில்லாமல் ரன்களை விடவில்லை.

Story first published: Saturday, June 22, 2019, 23:43 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+