Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்னதை செஞ்சேன்.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்தேன்.. ஷமி மகிழ்ச்சி!

Recommended Video

WORLD CUP 2019: IND VS AFG: SHAMI HATRICK | ஹாட்ரிக் விக்கெட் குறித்து ஷமி மகிழ்ச்சி!- வீடியோ

சவுதாம்ப்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஷமி கடைசி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அந்த ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் முன் நடந்த நிகழ்வுகளை, போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் ஷமி.

தோனி சொன்ன யோசனையை செய்து தான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்ததாக குறிப்பிட்டார் ஷமி.

போராடி வென்றது

போராடி வென்றது

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் எடுத்தது. குறைந்த அளவு ஸ்கோரை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணியை சேஸிங்கில் கட்டுப்படுத்தி. போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஷமி பந்து வீசினார். அவர் கடைசி ஓவரின் 3, 4 மற்றும் 5ஆம் பந்துகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி மூன்று விக்கெட்களை வரிசையாக சாய்த்து ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

தோனி யோசனை

தோனி யோசனை

முதல் இரண்டு விக்கெட்கள் வீழ்த்திய பின், ஷமி அடுத்த பந்தை யார்க்கராக வீசலாமா என யோசித்துள்ளார். அப்போது தோனியும் அதே யோசனையை கூறிய தோனி,. "இப்போது எதையும் மாற்ற வேண்டாம். உனக்கு ஹாட்ரிக் எடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இது அரிதான வாய்ப்பு" என்று கூறி உள்ளார்.

சொன்னதை செய்தேன்

சொன்னதை செய்தேன்

"என்னிடம் என்ன சொன்னாரோ அதை செய்தேன்" என்று கூறி தான் ஹாட்ரிக் எடுத்தது பற்றி குறிப்பிட்டார் ஷமி. மேலும், உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுப்பது அரிதான விஷயம். அந்த வகையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்

ஷமி இல்லை

ஷமி இல்லை

அந்த ஹாட்ரிக் விக்கெட்டுடன் ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆனது. இந்தப் போட்டியில் ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். முன்னதாக ஷமி உலகக்கோப்பை போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

வாய்ப்பு கிடைத்தது

வாய்ப்பு கிடைத்தது

புவனேஸ்வர் குமார் காயமடைந்ததை அடுத்து ஷமி அணியில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பில் ஹாட்ரிக் எடுத்து மிரட்டினார். இனி வரும் போட்டிகளிலும் ஷமி கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, June 23, 2019, 19:09 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+