Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்பயரை கையெடுத்து கும்பிட்டு.. அவுட் கேட்டு கெஞ்சிய விராட் கோலி.. இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

சவுதாம்ப்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அம்பயரை கை எடுத்து கும்பிடும் காட்சி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

ரசிகர்கள் பலரும் கோலிக்கு இந்த நிலைமையா என அவரை கிண்டல் செய்து வருகின்றனர். நூலிழையில் கைவிட்டுப் போன விக்கெட் வாய்ப்பால் கோலி அம்பயரிடம் முறையிடும் போது நடந்த நிகழ்வு தான் ட்ரென்டிங் ஆகி வருகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 224 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்தது ஆப்கானிஸ்தான் அணி. அப்போது 3வது ஓவரை வீசினார் ஷமி. இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், விரைவாக விக்கெட்களை எடுக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்தது.

அவுட் கேட்ட ஷமி

அவுட் கேட்ட ஷமி

மூன்றாவது ஓவரின் நான்காவது பந்து ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ஜஜாய் காலில் பட்டது. ஷமி எல்பிடபிள்யூ அவுட் கேட்டார். அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தார். கோலியிடம் ரிவ்யூ கேட்க தூண்டினார் ஷமி.

நூலிழை

கோலி ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் பார்த்த போது பந்து பேட்டில் படவில்லை என்றாலும், அவுட்சைடு லெக் திசையில் பந்தின் ஒரு பாதி பிட்ச் ஆகி இருந்தது. சில மில்லிமீட்டர் வித்தியாசத்தை காரணம் காட்டி அவுட் கொடுக்க மறுத்தார் அம்பயர்.

முறையிட்டார்

முறையிட்டார்

கோலி இதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார். அவர் கள அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்திடம் சென்று இது அவுட் தான். மிகவும் குறைவான வித்தியாசம் தான் என வாதிட்டார்.

கும்பிட்டாரா கோலி?

கும்பிட்டாரா கோலி?

அப்போது தான் அவர் தன் கைகளை கும்பிடுவது போல வைத்துக் கொண்டு பேசினார். உண்மையில், கோலி பந்து குறைந்த அளவில் தான் அவுட்சைடு திசையில் பிட்ச் ஆகி இருக்கிறது என்பதை குறிக்கவே கையை அப்படி வைத்துக் காட்டினார்.

ரசிகர்கள் கிண்டல்

ஆனால், ரசிகர்கள் செம மேட்டர் சிக்கி விட்டது என கோலி, அம்பயரிடம் கெஞ்சுவதை போன்ற அந்த காட்சியை எடுத்து மீம் போட்டு தள்ளினர். கோலி கும்பிடுவது எப்படி எல்லாம் இருக்கிறது என கிண்டல் செய்துள்ளனர். அதில் 2 சாம்பிள்.. இங்கே.

கல்லூரியில்..

கல்லூரியில் ஆசிரியரிடம் அட்டெண்டன்ஸ் போடுங்க என்று இப்படி தான் கெஞ்சுவார்களாம்..

விட்ருங்க போலீஸ்

ட்ராபிக் போலீஸ் பிடித்து விட்டால் இப்படி தான் நான் கெஞ்சுவேன் என்கிறார் இன்னொருவர்.

Story first published: Sunday, June 23, 2019, 0:30 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+