Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாதவ் கூட பரவாயில்லை.. தோனி தான் சரியில்லை.. குறி வைத்து கடுமையாக விமர்சித்த சச்சின்!

Recommended Video

WORLD CUP 2019: IND VS AFG: SACHIN | தோனி தான் சரியில்லை, குறி வைத்து விமர்சித்த சச்சின்!- வீடியோ

சவுதாம்ப்டன் : இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது.

அதிலும் தோனியின் ஆட்டம் டெஸ்ட் போட்டி போல ஆமை வேகத்தில் இருந்தது. போட்டியின் போதே தோனியை விமர்சிக்கத் துவங்கினர் ரசிகர்கள்.

போட்டி முடிந்த உடன் சச்சின் டெண்டுல்கர், தோனி - ஜாதவ் கூட்டணி குறித்து விமர்சித்துப் பேசி இருக்கிறார். அதிலும், ஜாதவ்வை கூட ஓரளவு ஏற்றுக் கொண்ட சச்சின், தோனியை தான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனி, கேதார் ஜாதவ் ஜோடி மிகவும் பொறுமையாக பேட்டிங் செய்தது. அதுவும் கடைசி 10 ஓவர்களிலும் இவர்கள் இருவரும் பவுண்டரி அல்லது அதிக சிங்கிள் ஓட முயற்சிக்காமல் தடுப்பாட்டம் ஆடினர்.

டெஸ்ட் ஆட்டம்

டெஸ்ட் ஆட்டம்

ஜாதவ் முதலில் நிதானம் காட்டினாலும், இடையே சில பவுண்டரிகள் அடித்து ஆறுதல் அளித்தார். ஆனால், தோனி 45வது ஓவரில் ஆட்டமிழக்கும் வரையில் டெஸ்ட் போட்டி போல ஆடி வெறுப்பேற்றினார். இதனால், இந்திய அணி கடைசி நேரத்தில் கூட ரன் சேர்க்க முடியாமல் திணறியது.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

தோனி 52 பந்துகளில் 28 ரன்களும், ஜாதவ் 68 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் இந்தியா போராடி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின்னும், தோனி - ஜாதவ் விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.

சச்சின் விமர்சனம்

சச்சின் விமர்சனம்

அவர்களின் நிதான ஆட்டத்தை சச்சினும் விமர்சித்துள்ளார். "பெரிய ஏமாற்றமாக இருந்தது. கேதார் ஜாதவ் - தோனி கூட்டணி எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. அது மிகவும் நிதானமாக இருந்தது. நாம் 34 சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வெறும் 119 ரன்கள் தான் எடுத்துள்ளோம் இந்த ஒரு ஏரியாவில் தான் நாம் சரியாக இல்லை. நேர்மறையான ஆட்டம் ஆடவில்லை" என்று தோனி ஜாதவ் குறித்து விமர்சித்தார் சச்சின்.

ஒரே டாட் பால்

ஒரே டாட் பால்

விராட் கோலி ஆட்டமிழந்த 38வது ஓவர் முதல், தோனி ஆட்டமிழந்த 45வது ஓவர் வரை இந்தியா அதிக டாட் பால் விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார். தோனி பெயரை சொல்லாமல், இப்படி நாசூக்காக விமர்சித்துள்ளார் சச்சின்.

தோனி ஆடி இருக்கணும்

தோனி ஆடி இருக்கணும்

மேலும், ஜாதவ் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிகம் பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெறாமல் இருந்தார். எனவே, அவருக்கு சிறிது அவகாசம் கொடுத்து போட்டியை தோனி தன் கையில் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. அதனால், ஜாதவ்வுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது என்றார் சச்சின். தோனியை மிகக் கடுமையாக சச்சின் விமர்சிப்பது இதுவே முதல் முறை!

Story first published: Sunday, June 23, 2019, 17:24 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+