For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு தம்பி நீ.. இந்திய யு19 அணியில் இப்படியொரு ஆல்ரவுண்டரா.. ஆஃப்கானை பொளந்த அர்ஷின் குல்கர்னி!

துபாய்: யு19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அர்ஷின் குல்கர்னியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

8 அணிகளுக்கு இடையிலான யு19 ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் உதய் சஹரின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஜத்ரான் - தராகில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

IND vs AFG : Due to the Fantastic play from Arshin Kulkarni, India beat Afghanistan by 7 wickets in the ACC U19 Asia Cup 2024

முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் லிம்பானி வீசிய பந்தில் தராகில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 2வது விக்கெட்டுக்கு ஜத்ரான் - சோஹில் கான் இருவரும் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில், சோஹில் கான் 12 ரன்களில் வெளியேறினார். அதன்பின் சிறப்பாக ஆடிய ஜத்ரான் 43 ரன்காளில் ஆட்டமிழக்க, பின்னர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக 50 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 173 ரன்காளுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி மற்றும் அர்ஷின் குல்கர்னி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேபோல் நமன் திவாரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ஆதர்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 14 ரன்களிலும், தொடர்ந்து வந்த ருத்ர படேல் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் அர்ஷின் குல்கர்னி - கேப்டன் சஹரன் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஹரன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அர்ஷின் - முஷீர் கான் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

சிறப்பாக ஆடிய அர்ஷின் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 70 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் முஷீர் கான் 48 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்தியாவில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் குறைவாக இருக்கும் சூழலில், இந்திய யு19 அணியின் அர்ஷின் குல்கர்னி குட்டி ஹர்திக் பாண்டியாவாக உருவாகி வருகிறார். இதனால் இவரின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, December 9, 2023, 8:09 [IST]
Other articles published on Dec 9, 2023
English summary
IND vs AFG : India beat Afghanistan by 7 wickets in the ACC U19 Asia Cup 2024. Arshin Kulkarni picks 3 wickets and 70 Runs as a opening batter in this Match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+