Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: எங்களுக்கு இது முழுமையான வெற்றி.. இளம் வீரர்கள் சாதித்துவிட்டார்கள்.. கேப்டன் கில் பாராட்டு

2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார்.

இந்தப் போட்டி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், "எங்களுக்கு இது ஒரு முழுமையான வெற்றி, அனைத்து அம்சங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. (ஃபாலோ-ஆன் (Follow-on) கொடுப்பது குறித்த முடிவு?) வெயில் மிக அதிகமாக இருந்தது.

மதிய உணவிற்கு முன்போ அல்லது முதல் இடைவேளைக்கு (drinks break) பிறகோ விக்கெட்டுகளை வீழ்த்தினால், பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் ஃபாலோ-ஆன் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். இல்லையென்றால், இன்னும் இரண்டு செஷன்கள் பேட்டிங் செய்துவிட்டு, அன்றைய நாளின் இறுதியில் அவர்களை மீண்டும் பந்துவீச அழைக்கலாம் என்று நினைத்தோம்.

ஆனால் எங்களுக்கு விக்கெட்டுகள் விரைவாகக் கிடைத்தன. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. ஃபாலோ-ஆன் கொடுத்த பிறகு சிராஜ் அந்த முக்கியமான விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

பிரசித் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.மானவ், வாஷி மற்றும் குல்தீப் ஆகிய மூவரிடமும் உள்ள தரம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை. இது அனுபவம் பெறுவதைப் பொறுத்தது. அதிக ஓவர்கள் வீசுவது, இது போன்ற ஆடுகளங்களில் பேட்ஸ்மேன்களை எப்படி வீழ்த்துவது, வேகத்தை மாற்றி வீசுவது மற்றும் வெவ்வேறு பகுதிகளில் பேட்ஸ்மேன்களைச் சோதிப்பது ஆகியவை தான் முக்கியம்.

IND vs AFG: இந்திய அணி வரலாற்று சாதனை.. இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் தோல்வி

IND vs AFG: இந்திய அணி வரலாற்று சாதனை.. இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கான் தோல்வி

இது மிகவும் எளிமையானது. முதலில் பேட்டிங் செய்யும் போது, எந்தச் சூழலாக இருந்தாலும், எந்த மைதானமாக இருந்தாலும் 350 ரன்களுக்கு மேல் எடுக்க முயற்சிக்க வேண்டும். எங்கு விளையாடினாலும் 20 விக்கெட்டுகளை எடுக்கும் திறன் எங்கள் பந்துவீச்சாளர்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அணியில் மாற்றம் ஏற்படும் போது, பேட்டிங் வரிசை அதிக அழுத்தத்தில் இருப்பதை உணர்கிறோம், எனவே அனுபவத்தைப் பெற முயற்சிக்கிறோம். ஒரு பேட்டிங் குழுவாக வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படித் தொடர்ந்து 350-400 ரன்களைக் குவிப்பது என்பதே எங்கள் இலக்கு." என்று கில் தெரிவித்தார்.

Story first published: Monday, June 8, 2026, 16:40 [IST]
Other articles published on Jun 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+