Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அபார பவுலிங்.. சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Recommended Video

சுழலில் சுருண்ட ஆப்கானிஸ்தான்..இந்தியா இன்னிங்ஸ் வெற்றி- வீடியோ

பெங்களூர்: ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபாரமாக வென்றுள்ளது. இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி நேற்று தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. தனது முதல் போட்டியை அந்த அணி இந்தியாவிற்கு எதிராக ஆடி வருகிறது.

இந்த போட்டி பெங்களூரில் நடந்தது. இந்த தொடரில் மொத்தமாகவே ஒரு போட்டிதான் நடந்தது. இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கர் ஸ்டானிஸ்காய் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அணி விவரம்

அணி விவரம்

இந்திய அணியில் தவான், முரளி விஜய், புஜாரா, லோகேஷ் ராகுல், ரஹானே, தினேஷ் கார்த்திக், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில், ஷாஷாத், ஜாவேத், ரஹ்மத், அஸ்கர், அப்சர், முகமது நபி, ஷஹிதி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் , ராமின் அஹமத் சாய், வபாதர் ஆகியோர் உள்ளனர்.

இந்தியா அதிரடி

இந்தியா அதிரடி

முதலில் களமிறங்கிய தவான் முரளி விஜய் ஜோடி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. தவான் அதிரடியாக 96 பந்தில் 107 ரன்கள் எடுத்தார். இதில் 19 பவுண்டரி மூன்று சிக்ஸர் அடித்தார். முரளி விஜய், 105 ரன்களுக்கும், லோகேஷ் ராகுல் 54 ரன்களுக்கும் அவுட்டானார்கள்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

அதன்பின் ரஹானே, தினேஷ் கார்த்திக், புஜாரா வரிசையாக அவுட்டானார்கள். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். கடைசியில் வந்த பாண்டியா 71 ரன்கள் எடுத்தார். முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்துள்ளது.

மோசம்

மோசம்

அதன்பின் ஆப்கானிஸ்தான் மிகவும் மோசமாக ஆடியது. களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக அவுட் ஆனார்கள். அதிக பட்சமாக முகமது நபி மட்டும் 24 ரன்கள் எடுத்தார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் 109 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 109 ரன்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்தது.

ஃபாலோ - ஆன்

ஃபாலோ - ஆன்

இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஃபாலோ - ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் 2வது இன்னிங்ஸ் இறங்கும். அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர்.இதனால் இடைவேளைக்கு பின் ஆப்கானிஸ்தான் மீண்டும் களமிறங்க உள்ளது.

 வெற்றி

வெற்றி

இரண்டாவது இன்னிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் மீண்டும் மோசமாக ஆடியது. வரிசையாக வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். ஷாகிதி மட்டும் 36 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 4 விக்கெட், அஸ்வின் 1 விக்கெட், உமேஷ் யாதவ் 3 விக்கெட், இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Friday, June 15, 2018, 17:39 [IST]
Other articles published on Jun 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+