Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 பேக்குடன் நிற்கும் ரிங்கு.. 8 பேக்கை காட்டிய கோலி.. பீச் வாலிபாலில் பட்டையை கிளப்பும் இந்திய அணி!

பர்படாஸ் : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, பீச் வாலிபால் விளையாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. லீக் சுற்றில் அமெரிக்கா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்திய அணி 7 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் நடந்த நிலையில், சூப்பர் 8 மற்றும் நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது.

t20 world cup indian national cricket team cricket IND vs AFG 20 2024

இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர். இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் தனது முழு ஃபிட்னஸையும் காட்டியுள்ளார். 6 பேக் உடலுடன் ரிங்கு சிங் இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாகிய நிலையில், இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த முறை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் சென்ற போது இதேபோல் வீரர்கள் பீச் வாலிபால் விளையாடினர். ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்கும் ஒரு பக்கம் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களிலேயே பல்வேறு போட்டிகளில் விளையாடி பழக்கப்படுத்தி கொண்டுள்ளனர். ஆனால் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தான் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாடவுள்ளது. இதனால் 3 நாட்கள் இடைவேளை இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 17, 2024, 15:56 [IST]
Other articles published on Jun 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+