For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க இது? இந்தியா பிளேயிங் 11-ல் ஷமிக்கு கல்தா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த ரோஹித் சர்மா

டெல்லி : இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு தரவில்லை.

அவருக்கு பதில் ஷர்துல் தாக்குர் இந்தப் போட்டியில் இடம் பெற்றார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா முழு பலத்துடன் கூடிய அணியை களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலியா உடனான போட்டியில் இந்தியா மூன்று ஸ்பின்னர்களை பயன்படுத்தியது.

Ind vs Afg - Indian team playing XI in India vs afghanistan match

ஆனால், டெல்லி ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்தியா மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை ஆட வைக்கும் என கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி சற்று பலம் குறைந்த அணி தான். அதற்காக அந்த அணியை குறைத்து எடை போட்டு விட முடியாது. அதே சமயம், இந்தப் போட்டியில் இந்திய அணி அஸ்வினுக்கு ஓய்வு அளித்து முகமது ஷமி அல்லது ஷர்துல் தாக்குர் போன்ற மாற்று வேகப் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற பேச்சு இருந்தது.

அதே போல, டெல்லி ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்தியா மூன்று ஸ்பின்னர்களை களமிறக்கும் முடிவை கைவிட்டு இருக்கிறது.

அதன்படி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகிய மூவரில், அஸ்வினை நீக்கி விட்டு ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை சேர்த்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவார் என்று எண்ணிய நிலையில், ஷர்துல் தாக்குர் இடம் பெற்று இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணியை அதிரடியாக வீழ்த்த வேண்டும் என்றால் வேகப் பந்துவீச்சில் ஸ்பெஷலிஸ்ட் ஆன முகமது ஷமியை தான் ரோஹித் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கும் ஷர்துல் தாக்குரை தேர்வு செய்துள்ளார்.

சுப்மன் கில் இன்னும் காய்ச்சலில் இருந்து குணமடையாததால் அவருக்கு பதில் இஷான் கிஷன் அணியில் துவக்கம் அளிப்பார்.
மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. ரோஹித் சர்மா, மாற்று துவக்க வீரரான இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா - இதுதான் பேட்டிங் வரிசை.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் 11 - ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ்.

Story first published: Wednesday, October 11, 2023, 7:40 [IST]
Other articles published on Oct 11, 2023
English summary
Ind vs Afg - Indian team playing XI in India vs afghanistan match. Mohammed Shami might come back into the team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+