Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வானும், மண்ணும் பிரெண்ட்ஷிப் ஆனதே ! விரோதத்திற்கு முற்று புள்ளி வைத்த கோலி, நவீன் உல் ஹக்

டெல்லி: ஐபிஎல் தொடரின் போது நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்திய அணியின் விராட் கோலி, ஆஃப்கான் அணியின் நவீன் உல் ஹக்கும், இன்றைய ஆட்டத்தில் நட்பு பாராட்டியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் போது லக்னோ - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் லக்னோ அணிக்காக ஆடிய ஆஃப்கான் வீரர் நவீன் உல் ஹக் மோதலில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் மோதிக் கொண்ட சம்பவம் ரசிகர்களால் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட்டில் இந்தியாவின் முகமான விராட் கோலியுடன் மோதியதால், ரசிகர்கள் நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் கோலி.. கோலி என்று கோஷமிட தொடங்கினர்.

IND vs AFG: IPL Fighters Virat Kohli and Naveen Ul Haq hugs and smiles each other in World Cup 2023

இது ஐபிஎல் மட்டுமல்லாமல் நவீன் உல் ஹக் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தது. இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. விராட் கோலியின் சொந்த மண் என்பதால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் நவீன் உல் ஹக் பயிற்சியில் ஈடுபட்ட போது கூட அவரை நோக்கி விராட் கோலி என்று ரசிகர்கள் கோஷமிட தொடங்கினார்கள்.

இந்த நிலையில் இஷான் கிஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி களம் புகுந்தார். அப்போது ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி உடனடியாக பந்தை நவீன் உல் ஹக் கைகளில் கொடுத்தார். ஐபிஎல் தொடருக்கு பின் விராட் கோலியும் நவீன் உல் ஹக்கும் முதல்முறையாக நேருக்கு நேராக மோதிக் கொண்டதால், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை தொட்டது. கோலி.. கோலி.. என்று ரசிகர்கள் பாடலை போல் மைதானத்தில் கத்த தொடங்கினார்.

இதன்பின் சில ஓவர்களை நவீன் உல் ஹக் வீசியதும், விராட் கோலி எதிர்முனைக்கு நடந்து சென்றார். அப்போது நவீன் உல் ஹக்கை பார்த்து விராட் கோலி சிரிக்க, பதிலுக்கு நவீன் உல் ஹக் உடனடியாக விராட் கோலியை நோக்கி ஓடி வந்து கை பிடித்தார். இருவரும் மாறி மாறி தோள்களை தட்டிக் கொடுத்து சிரித்து கொண்டு ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புடன் நட்பு பாராட்டினார். அப்போது வர்ணனையில் கவுதம் கம்பீர் இவர்கள் இருவரும் பற்றி பேசினார்.

இதனால் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இருவருமே களத்தில் ஆக்ரோஷமான வீரர்கள் என்றாலும், மோதலை மறந்து நட்பு பாராட்டியது கூடுதல் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இவர்களின் வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, October 11, 2023, 21:52 [IST]
Other articles published on Oct 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+