Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: கடைசி 2 பந்தில் 2 விக்கெட்.. 1 விக்கெட் இருந்தும், குல்தீப் யாதவ்க்கு மிஸ் ஆன ஹாட்ரிக் வாய்ப்பு

சண்டிகர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தனது டெஸ்ட் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டத்தின் மூன்றாவது நாளிலேயே போட்டி முடிவுக்கு வந்தது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸின் 36-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது மாயாஜால பந்துவீச்சால் ஆட்டத்தை மாற்றினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில், சுழன்று சென்ற பந்தை நங்கையாலியா கரோட்டே சரியாகக் கணிக்கத் தவறி பாய்ன்ட் திசையில் கொடுக்க, மானவ் சுதர் அதனைத் துல்லியமாகக் கேட்ச் பிடித்தார். அடுத்த பந்திலேயே குல்தீப் வீசிய கூக்ளி பந்தில், முகமது சலீம் சஃபி விக்கெட்டை பறிகொடுத்தார். காயமடைந்த ஷரபுதீன் அஷ்ரஃப் பேட்டிங் செய்ய வராததால், இந்தியா தனது வெற்றியை நிறைவு செய்தது.

இதன் காரணமாக குல்தீப் யாதவ்க்கு ஹாட்ரிக் வாய்ப்பு பறிப்போனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி வெறும் 112 ரன்களுக்கே சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி, 11 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தச் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் மிகத் தெளிவாகச் செயல்பட்டனர்.

IND vs AFG: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா எப்போது அணிக்கு திரும்புவார்கள்.. பயிற்சியாளர் விளக்கம்

IND vs AFG: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா எப்போது அணிக்கு திரும்புவார்கள்.. பயிற்சியாளர் விளக்கம்

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து, 127 ஓவர்களில் 564/8 என்ற பிரம்மாண்ட ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் 177 பந்துகளில் 126 ரன்களும், துணை கேப்டன் கே.எல். ராகுல் 165 பந்துகளில் 100 ரன்களும் எடுத்து அசத்தினர். ஆப்கானிஸ்தான் தரப்பில் பந்துவீச்சாளர் முகமது சலீம் சஃபி பொறுமையாகப் பந்துவீசி 27 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை.

IND vs AFG: இந்திய அணிக்கு தூண் போல் நிற்கும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர்.. ஆக்சன் கிங் ஆல்ரவுண்டர்

IND vs AFG: இந்திய அணிக்கு தூண் போல் நிற்கும் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர்.. ஆக்சன் கிங் ஆல்ரவுண்டர்

பதிலுக்கு விளையாடிய ஆப்கானிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்குக் கட்டுப்பட்டது. ரஹ்மத் ஷா 60 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் அறிமுக வீரர் மானவ் சுதர் 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளைச் சாய்த்து மிரட்டினார். கில் தலைமையிலான இந்திய அணி எடுத்த சிறந்த முடிவால் ஆப்கானிஸ்தானுக்குப் 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆப்கானிஸ்தான் தடுமாற, மூன்றாவது நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் ஒருபுறமாக முடிவுக்கு வந்தது.

Story first published: Monday, June 8, 2026, 23:07 [IST]
Other articles published on Jun 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+