Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: அடுத்த ஸ்டார் கிடைச்சிட்டாரு! அறிமுக போட்டியில் முதல் ஓவரிலே மானவ் சுதர் விக்கெட் வீழ்த்தி அபாரம்

சந்திகார்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களைக் கட்டுப்படுத்த கேப்டன் சுப்மன் கில், அறிமுக வீரர் மானவ் சுதரை பந்துவீச அழைத்தார். தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் ஓவரை வீசிய சுதர், அதன் 4-வது பந்திலேயே விக்கெட் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் அப்துல் மாலிக், சுதரின் பந்தை ஸ்வீப் (Sweep) செய்ய முயன்றார்.

ஆனால் பந்து பேட்டின் மேல் விளிம்பில் பட்டு உயரே எழும்பியது. அதை டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஓடி வந்த முகமது சிராஜ் அற்புதமாகப் பிடித்தார். இதன் மூலம் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய அரிய சாதனையை சுதர் படைத்தார். கேட்ச் பிடிக்கும் போது ராகுலும் ஓ வந்த நிலையில், சிராஜை பார்த்து நிறுத்திவிட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்வது காலத்தின் கட்டாயம்.. இனி அவர் தான் எதிர்காலம்- அஜித் அகர்கர் கருத்து

அப்போது, சிராஜ் கேட்ச் பிடித்துவிட்டு, ராகுலை பார்த்து நீ ஏன் ஓடி வந்து நின்றுவிட்டாய் என்று கேள்வி எழுப்பினார். ராஜஸ்தானைச் சேர்ந்த 23 வயதான மானவ் சுதர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். உள்ளூர் போட்டிகளில் அபாரமாகச் செயல்பட்டதன் மூலம் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

முதல்தர கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடி 129 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 8/33 என்பது இவரது சிறந்த பந்துவீச்சாகும். பேட்டிங்கிலும் ஒரு சதம் உட்பட 945 ரன்கள் எடுத்துள்ளார்.லிஸ்ட் ஏ 50 ஓவர் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 34 விக்கெட்டுகளும், 29 டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க பல முறை பரிந்துரை செய்தேன்.. ரிக்கி பாண்டிங் மகிழ்ச்சி

ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்க பல முறை பரிந்துரை செய்தேன்.. ரிக்கி பாண்டிங் மகிழ்ச்சி

2022-23 ரஞ்சி கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ரவீந்திர ஜடேஜாவிற்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இவர் உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 7, 2026, 14:34 [IST]
Other articles published on Jun 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+