பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை சிறிய கவனக் குறைவால் வீணடித்து விட்டார். விராட் கோலி போன்ற பெரிய பேட்ஸ்மேன் உலகக்கோப்பை போன்ற தொடரில் பட்டையை கிளப்புவது தான் வழக்கம்.
டி20 உலக கோப்பை வரலாற்றிலே அதிக முறை தொடர் நாயகன் விருதை வாங்கியவர் கோலி மட்டும் தான். ஆனால் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த சூழலில் சூப்பர் 8 சுற்றில் விராட் கோலி தன்னுடைய ஃபார்மை மீட்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார். ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டம் இழக்க விராட் கோலி மீது கடும் அழுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆடுகளமும் தோய்வாக இருந்ததால் விராட் கோலி தன்னுடைய ஆட்டத்தின் போக்கை மாற்றினார். முதலில் பொறுமையாக விளையாடிய பிறகு அதிரடி காட்டி ஆங்கர் ரோல் செய்யலாம் என்ற மனநிலைக்கு விராட் கோலி சென்றார்.
இந்த சூழலில் தான் நவீன் உல் ஹக் பந்தை விராட் கோலி நேராக சிக்ஸருக்கு அடித்தார். இதன் மூலம் விராட் கோலி ஃபார்மில் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சூழலில் விராட் கோலி அதிரடியை காட்டலாம் என்ற நினைப்பில் ரஷித் கான் ஓவரில் அடித்த ஆட முற்பட்டார். அப்போது கொஞ்சம் கவன குறைவு காரணமாக பவுண்டரி லைனில் பில்டர் இருப்பதை கவனிக்காமல் விராட் கோலி ரஷீத் கான் பந்தை தூக்கி கவரில் அடித்தார்.
அப்போது அது நேராக பவுண்டரி லைனில் நின்ற முஹம்மது நபியிடம் பிடிபட்டது. இதன் மூலம் விராட் கோலி 24 பந்துகளில் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி போன்ற வீரர்கள் ஒரு தொடரில் தடுமாறினாலும் பின்னர் எப்படி ஒரு ஆட்டத்தில் ரன் குவிக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டும் நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டார். இன்று மட்டும் விராட் கோலி கடைசி வரை நின்றிருந்தால், நிச்சயம் 60,70 ரன்கள் அடித்திருப்பார். இதன் மூலம் விராட் கோலி தமக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.