Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG : விராட் கோலி ஈகோவை தொடாதீர்கள்.. அவரின் நண்பனாக சொல்கிறேன்.. அஸ்வின் வார்னிங்!

சென்னை : விராட் கோலியை ஈகோவை யாராவது தொட்டுவிட்டால், எப்படி பேட்டிங் செய்ய வேண்டுமா என்று பாடம் எடுப்பதை போல் அவர் பீஸ்ட் மோடில் விளையாடுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் விராட் கோலி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தற்போது டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கியுள்ளன. நாளை ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில் இந்திய சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூ-ட்யூப் சேனலில், விராட் கோலி போன்ற வீரரின் மன உறுதியை உடைப்பது என்பது இயலாத காரியம் என்றே சொல்வேன். ஏனென்றால் விராட் கோலியை மட்டும் ஃபார்மில் இல்லை என்று நம்பர் 3 வரிசைக்கு இறக்கினால் அவ்வளவு தான்.

t20 world cup indian national cricket team cricket Virat Kohli 20 2024

நீ என்னை நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய இறக்கிட்டீங்க.. இப்போது எப்படி பேட்டிங் செய்யனும்னு நான் காட்டவா என்று கேட்டுக் கொண்டே மிரட்டுவார். விராட் கோலியின் பேட்டிங்கே அப்படிதான் இருக்கும். இதனை விராட் கோலியுடன் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய போது, நான் விராட் கோலியின் உடல்மொழியை பார்த்தேன். சில வீரர்களுடன் பேசிக் கொண்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

அவரின் உடல்மொழியை பார்த்த போது, அவரின் மன உறுதி உச்சத்தில் இருப்பது கண்கூடாக தெரிகிறது. அந்த கான்ஃபிடன்ஸ் தனது கிரிக்கெட் மீதும், ஆட்டத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களிடம் இருப்பது. அதனால் விராட் கோலியின் ஃபார்ம் நன்றாகவே உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் ரன்கள் சேர்ப்பாரா என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. என்னை பொறுத்தவரை அவர் எப்போதும் ஓடி ஓடி ரன்களை சேர்ப்பார் என்பது தான். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி மிரட்டிவிடுவார்.

கடந்த காலங்களில் விராட் கோலியின் பேட்டிங்கை அனைவரும் பார்த்திருக்கிறோம். அதனால் சூப்பர் 8ல் விராட் கோலியிடம் இருந்து நிச்சயம் ரன்கள் வரப் போகிறது. இதன் மூலமாக குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியால் இந்திய அணியை வீழ்த்த முடியுமா என்ற பலரும் கேட்கிறார்கள். எந்த அணியாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 20, 2024, 6:15 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+