For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுத்தும் கொண்டாடாத ஆப்கானிஸ்தான் வீரர்கள்.. என்ன காரணம்?

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்தின. இதில் பொதுவாக ஆப்கானிஸ்தான் போன்ற பலம் குன்றி அணி இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுத்தால் ஆடி பாடி கொண்டாடுவார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிகவும் அமைதி காத்தார்கள்.

இதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணியை மிக குறைந்த இலக்கில் சுருட்டினால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும்.

t20 world cup ind vs afg suryakumar yadav virat kohli rashid khan indian national cricket team cricket 20 2024

ஏனென்றால் ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் பேட்டிங் செய்வது கடினம். இதனால் பெரிய சாட் ஆடினாலும் பவுண்டரி, சிக்ஸர் என்று அதிக அளவு செல்லாது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்தார்கள். குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் விக்கெட்டை பக்காவாக பிளான் பண்ணி எடுத்தார்கள்.

எனினும் இதனை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாட வில்லை. இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி வந்தனர். ஆனால் இதற்கு ஐசிசி விதித்த புதிய விதி தான் ஆப்கானிஸ்தான் வீரர்களின் கொண்டாட்டத்தை தடுத்து இருக்கிறது. அதாவது போட்டியை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக குறிப்பிட்ட நேரத்தில் 19வது வரை வீசி முடித்திருக்க வேண்டும்.

அப்படி கடைசி ஓவர் காலதாமதமாக ஆனால் எல்லைக்கோட்டில் ஐந்து பில்டர்க்கு பதிலாக நான்கு பில்டர்கள் தான் நிறுத்த முடியும். இதன் மூலம் இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய சாட் ஆடி இலக்கை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் போட்டியை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரசித் கான் விக்கெட்டுகளை எடுத்தாலும்,

இல்லை ரன் அவுட் செய்தாலும் கேட்ச் பிடித்தாலும் வீரர்கள் யாரும் தங்களது இடத்தை விட்டு வர வேண்டாம் என்று சைகையில் காட்டினார். போட்டி தாமதமாக நடைபெறுவதால் வீரர்கள் விரைவாக செயல்பட வேண்டும் என்றும் அவர் சைவையில் காட்டினார். இதன் காரணமாக தான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விக்கெட்டுகளை எடுத்தும் கொண்டாடாமல் தங்களுடைய இடத்தில் இருந்தார்கள்.

Story first published: Thursday, June 20, 2024, 22:55 [IST]
Other articles published on Jun 20, 2024
English summary
Ind vs afg - Reason behind why afghanistan players did not celebrate after taking india wickets இந்திய வீரர்களின் விக்கெட்டை எடுத்தும் கொண்டாடாத ஆப்கானிஸ்தான் வீரர்கள்.. என்ன காரணம்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+