Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG- வெறும் 6 ரன்கள் தான் தேவை.. சூர்யகுமார் யாதவ் படைக்க போகும் பிரம்மாண்ட சாதனை

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறார்.

இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் தடுமாறி வரும் நிலையில் சூப்பர் 8 சுற்று தங்களுடைய பார்மை மீட்பார்கக் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பன்ட், சூரியகுமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் லீக் சுற்றில் நல்ல பார்மில் இருந்தனர்.

t20 world cup ind vs afg suryakumar virat kohli indian national cricket team cricket 20 2024

இதனால் சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த ஸ்டார் வீரர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சூரிய குமார் யாதவ் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். சூரியகுமார் யாதவும் இதுவரை வெஸ்ட் இண்டீசில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 216 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆறு ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சர்வதேச t20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 221ல் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

இதேபோன்று ரோகித் சர்மா 15 ரன்கள் அடித்தால், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார். இந்த நிலையில் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெரிய அளவில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதிக்கவில்லை. இதுவரை அவர் மூன்று முறை தான் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடுகிறார்.

அதில் மொத்தமாக அவர் 112 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலியின் இந்த பட்டியலில் கிடுகிடுவென உயர வேண்டுமென்றால் நடப்பு தொடரில் தன்னுடைய பழைய பார்மை மீட்க வேண்டும். இதேபோன்று இந்திய அணியின் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 174 ரன்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Thursday, June 20, 2024, 0:16 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+