Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஐபிஎல்-இல் கூட வாய்ப்பு இல்லாதவருக்கு இந்திய அணி தொப்பியை கொடுப்பீங்களா?" ஸ்ரீகாந்த் ஆவேசம்

சென்னை: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3-வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, தொடரை 3-0 எனக் கைப்பற்றி அபார சாதனை படைத்தது. இந்தியா பெரிய வெற்றியை பெற்றாலும், அர்ஷ்தீப் சிங்கை வெளியே உட்கார வைத்துவிட்டு, புதிய வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தாக்குருக்கு வாய்ப்பு வழங்கியதை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விளாசியுள்ளார். இந்திய அணி வாய்ப்பை எளிதாக ஒருவருக்கு கொடுக்கக் கூடாது என அவர் விமர்சித்து இருக்கிறார்.

தனது யூடியூப் பக்கத்தில் இந்திய அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த், "யாரோ ஒருவருக்கு இந்திய அணியின் தொப்பியை எப்படி இவ்வளவு எளிதாகக் கொடுக்க முடியும்? இப்படி ஆளாளுக்கு இந்திய தொப்பியைக் கொடுத்தால், இந்திய அணிக்காக விளையாடுவதன் மரியாதையே போய்விடும். இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்றால் அதற்கு தகுதியும், உள்நாட்டுப் போட்டிகளில் அசாத்திய திறமையும் தேவை.

Ind vs Afg T20 Kris Srikkanth Slams Team Management Over Yash Thakur s Selection In 3rd T20I

ஐபிஎல் தொடரிலேயே தொடர்ச்சியாக விளையாடாத யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய் போன்றவர்களுக்கு இந்திய அணியில் இடம் தருவது மிகப்பெரிய அநீதி. புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவ வீரர்களைப் புறக்கணித்துவிட்டு இவர்களுக்கு வாய்ப்பளிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில் யாஷ் தாக்குர் 2 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் அரங்கில் இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா

49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய கையோடு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. அங்கு ஜப்பான் அணிக்கு எதிரான ஒரு சிறப்பு டி20 போட்டியிலும், அதைத் தொடர்ந்து 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய அணி களம் காணவுள்ளது.

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில்

Also Read

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில்
Story first published: Sunday, September 20, 2026, 13:13 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+