Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த நாட்டிலேயே வெளிநாட்டு அணியாக ஆடப் போகும் இந்தியா.. ஆப்கானிஸ்தான் தொடரில் புதுமை

டெல்லி: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி செப்டம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் வித்தியாசமான முறையில் இந்திய மண்ணிலேயே இந்திய அணி வெளிநாட்டு அணியாக விளையாட உள்ளது. இந்தத் தொடர் டெல்லியில் நடைபெற்றாலும், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் அணிதான் போட்டியை நடத்தும் 'ஹோஸ்ட்' அணியாகச் செயல்பட உள்ளது.

இந்த சர்வதேச டி20 தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் போதிய மைதான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் தங்களது சொந்தப் போட்டிகளை இந்தியாவில் உள்ள டேராடூன், கிரேட்டர் நொய்டா, லக்னோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வருகின்றனர்.

IND vs AFG T20 Series India to play as Away Team on home soil in unique T20I Series against Afghanistan

இதுவரை பிற நாடுகளை இந்தியாவில் வைத்து எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், முதல்முறையாக இந்திய அணியையே டெல்லியில் விருந்தினராக உபசரிக்க உள்ளது. இதன் மூலம் இந்திய அணி தனது சொந்த நாட்டிலேயே 'அவே டீம் (away team)' ஆக விளையாடவுள்ளது.

செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரு அணிகளும் தயாராக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி படுதோல்விகளை அடைந்தது. டி20 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.

அதனால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய அணி இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கும். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியே இந்தத் தொடரிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, ஜஸ்பிரித் பும்ரா.

Story first published: Friday, July 24, 2026, 10:14 [IST]
Other articles published on Jul 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+