Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: இந்திய மண்ணில் மாபெரும் சாதனை படைக்க தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி

மும்பை: இந்திய கிரிக்கெட்டின் வளரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது இரண்டு மாத கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு சாதனையை படைக்க உள்ளார். செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் களமிறங்கினால், இந்திய மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மிகக்குறைந்த வயதுடைய முழு உறுப்பினர் நாட்டு வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மிக இளவயது இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை 15 வயது மற்றும் 99 நாட்களேயான சூர்யவன்ஷி ஏற்கனவே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார்.

Vaibhav sooryavanshi

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளதால், சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தாலும், இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது, இந்த சேனல், ஒடிடியில் தான் இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியை காண முடியும்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிடையாது, இந்த சேனல், ஒடிடியில் தான் இந்தியா, ஆப்கானிஸ்தான் போட்டியை காண முடியும்

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சாம்சனுக்குப் பதிலாக சூர்யவன்ஷி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். எனினும், அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் மூத்த வீரரான சாம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்த 15 வயது இளம் வீரர் தனது இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி டி20 போட்டிகளில் ஒரு நிலையான தொடக்க ஜோடியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பிளேயிங லெவனைத் தேர்வு செய்வது எளிதானதாக இருக்காது. இருப்பினும், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்கு முன்னதாக, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகிய இருவருக்கும் தகுந்த வாய்ப்புகளை வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்திய மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முழு உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த மிக இளம் வயது வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான், ஜூன் 14, 2018 அன்று பெங்களூருவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது 17 வயது மற்றும் 78 நாட்களில் விளையாடி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல- ஸ்ரேயாஸ் ஐயர்

Also Read

IND vs AFG: கம்பீர் ரொம்ப ஆக்கோரஷமாக இருப்பார்.. தொடக்க ஜோடி பற்றி முடிவு எடுக்கல- ஸ்ரேயாஸ் ஐயர்

இந்திய வீரர்களில், சச்சின் டெண்டுல்கர் டிசம்பர் 1990-ல் புனேயில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியபோது அவரது வயது 17 ஆண்டுகள் 253 நாட்கள் ஆகும். இதுவே இந்திய மண்ணில் விளையாடிய மிக இளம் வயது இந்திய வீரர் என்ற சாதனையாக நீடிக்கிறது.

Story first published: Sunday, September 13, 2026, 13:56 [IST]
Other articles published on Sep 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+