Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND v AFG- ஆத்தாடி இது அதுல்ல.. ஹரிஷ் ரவுப்க்கு கொடுத்த அதே ட்ரீட்மென்ட்.. மிரண்டு போன ஆப்கானிஸ்தான்

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அடித்த ஷாட் ஒன்று ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார்.

லீக் சுற்று முடிவில் விராட் கோலி மொத்தமாகவே ஐந்து ரன்கள் தான் அடித்திருந்தார். இதனால் விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் இருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

t20 world cup ind vs afg virat kohli indian national cricket team cricket 20 2024

இதில் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டம் இழக்க, விராட் கோலி என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், கோலிக்கு கடும் நெருக்கடியை பந்து வீச்சில் கொடுத்து வந்தார். நவீன் உல் ஹக்கும் விராட் கோலியும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோதிக் கொண்ட சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

தற்போது இருவரும் சமாதானமாக மாறினாலும் நவீன் உல் ஹக் ஓவரில் விராட் கோலி என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த ஓவரில் நான்காவது பந்தில் கோலி ஓங்கி அறைந்தார். அந்த பந்து நேராக சிக்ஸருக்கு சென்றது.

இந்த ஷாட்டை பார்த்ததும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மிரண்டு போய்விட்டனர். இந்த ஷாட்டை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது.

அப்போது ஹரிஷ் ரவுப் வீசிய ஓவரில் விராட் கோலி தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அதில் ஒரு சிக்சரை டென்னிஸ் ஷாட் போல் பளார் என அறைந்து அது நேராக சிக்ஸருக்கு சென்றது. இதனை நினைவுபடுத்தும் விதமாக அதேபோல் ஒரு ஷாட்டை விராட் கோலி ஆடி இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் கோலி பார்முக்கு திரும்பி விட்டார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

Story first published: Thursday, June 20, 2024, 20:55 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+