For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா இப்படி? 2 தமிழக வீரர்களும் சொதப்பல்.. பைனல் மேட்ச்சில் சுந்தர், கிஷோர் தடுமாற்றம்

ஹாங்சோ : இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிப் போட்டியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் பந்துவீச்சு பெரும் ஏமாற்றம் அளித்தது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது., அதில் ஆண்கள் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

IND vs AFG : Washington Sundar, Sai Kishore bowling went bad in India vs Afghanistan T20 final

இந்திய அணி அரையிறுதிப் போட்டியைப் போன்றே இந்தப் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஷாபாஸ் அஹ்மத், ரவி பிஷ்னோய் என நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கியது. ஆனால், அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை. நான்கு ஸ்பின்னர்களில் ரவி பிஷ்னோய் மட்டுமே சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் ஸ்பின் பந்துவீச்சில் ரன் குவிப்பது சிரமம் என்பதாலேயே இந்திய அணி இந்த முடிவை எடுத்தது. அதே சமயம், அதிக ரன்களை முதலில் ஆடும் ஆப்கானிஸ்தான் எடுத்து விட்டால் அது இந்திய அணிக்கு சேஸிங்கில் சிக்கலை உருவாக்கும் என்ற நிலையும் இருந்தது.

ஆனால், இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்களில் 23 ரன்களை வாரிக் கொடுத்தார். சாய் கிஷோர் 4 ஓவர்களில் 26 ரன்களை கொடுத்தார். இரண்டு தமிழக வீரர்களுமே அரையிறுதியில் மற்ற வீரர்களை விட சிறப்பாக பந்து வீசி இருந்த நிலையில், இந்தப் போட்டியில் அவர்கள் சொதப்பினர். இருவருமே விக்கெட்டும் எடுக்கவில்லை.

மழை வரும் வரை நடைப்பெற்ற ஆட்டத்தில் ஷாபாஸ் அஹ்மத் இவர்களைக் காட்டிலும் மோசமாக பந்து வீசி 3.2 ஓவரில் 28 ரன்களை கொடுத்து இருந்தார். எனினும், அவர் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ரவி பிஷ்னோய் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். சிவம் துபே 1 ஓவர் வீசி 4 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை வந்ததால் போட்டி தடைபட்டது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவுக்கு ஓவருக்கு 6 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை உருவாக்கி விட்டனர் பந்துவீச்சாளர்கள்.

Story first published: Saturday, October 7, 2023, 14:57 [IST]
Other articles published on Oct 7, 2023
English summary
IND vs AFG : Washington Sundar, Sai Kishore bowling went bad in India vs Afghanistan T20 final in Asian games 2023.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+