Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்சித் ராணா காயம்.. மாற்று வீரராக இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியதை அடுத்து, மாற்று வீரராக 27 வயதான யாஷ் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் ஹர்ஷித் ராணா தீவிர உடற்தகுதி மீட்புப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் போது பந்து வீசிய அவருக்கு, தொடையின் முன் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் விளையாடும் வாய்ப்பை இழந்து மீண்டும் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Yash Thakur

அண்மையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது, யாஷ் தாக்கூர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக விளையாடும் இந்த வேகப்பந்து வீச்சாளர், இதுவரை 2 சர்வதேச போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடர்.. உடல்தகுதி தேர்வில் வென்ற இந்திய அணியின் அதிரடி வீரர்

ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடர்.. உடல்தகுதி தேர்வில் வென்ற இந்திய அணியின் அதிரடி வீரர்

உள்நாட்டு டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடியுள்ள இவர், 50 போட்டிகளில் 7.04 எகானமி ரேட்டுடன் 81 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான மாற்றி அமைக்கப்பட்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அணியில் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சு கூட்டணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் புதிதாக இணைந்துள்ள யாஷ் தாக்கூர் இடம் பெற்றுள்ளார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணைக் கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருடன் விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் பேட்டிங் வரிசையை பலப்படுத்துகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட்டு, அடுத்த 2 நாளில் டி20 விளையாடனும்.. திலக் விர்மா விமர்சனம்

Also Read

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி விட்டு, அடுத்த 2 நாளில் டி20 விளையாடனும்.. திலக் விர்மா விமர்சனம்

ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Story first published: Thursday, September 10, 2026, 13:48 [IST]
Other articles published on Sep 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+