Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஸ்பின்னர்களா? குட்டையை குழப்பிய ஸ்ரீகாந்த்.. பிளேயிங் லெவனை பாருங்க

மும்பை: இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிகளின் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இது குறித்து தற்போது பார்க்கலாம். தற்போது இருக்கும் ட்ரெண்டின்படி இந்திய அணி 8 பேட்டர்களை வைத்து விளையாடுகிறது. அதாவது பேட்டிங் வரிசையில் நம்பர் எட்டாவது வீரராக வரும் வீரருக்கு பேட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அப்படி பார்த்தால் வாஷிங்டன் சுந்தர் ஆட்டோமேட்டிக்காக அணிக்குள் வந்துவிடுவார்.

Ind vs aus 1st odi

அப்படி இருக்கும் போது சுந்தர் எட்டாவது வீரராகவும் ஒன்பதாவது வீரராகவும் 10 மற்றும் 11-வது வீரராக சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருப்பார்கள்.நான் நிதிஷ்குமாரை மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக பயன்படுத்துவதன் மூலம் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள்.

ஒருவேளை ஆஸ்திரேலிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தால் அந்த அணியில் ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது அணியில் பும்ரா இல்லை. இது மிகப்பெரிய மிஸ் ஆக நான் பார்க்கின்றேன். இதனால் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவை நம்பி தான் நாம் இருக்க வேண்டும்.

இதன் காரணமாக குல்தீப் யாதவை நாம் அணியை விட்டு நீக்க முடியாது. ஒருவேளை நீங்கள் குல்தீப்பை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தர் வைத்து விளையாடுவேன் என்று எண்ணினால், அது குறித்து செய்யும் அநியாயமாகும். எனவே நான் ஒரு கேப்டனாக இருந்தால் நிச்சயம் சிராஜ், குல்தீப் வாஷிங்டன் மற்றும் பிரசித் கிருஷ்ணா என்ற நான்கு வீரர்களையும் பயன்படுத்திக் கொள்வேன்.

ஆர்ஸ்தீப் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. ஆனால் பிரச்சினையை காம்பினேஷனில் தான் இருக்கின்றது. ஏன் ஆர்ஸ்தீப் பதிலாக பிரசித் கிருஷ்ணா என்ற கேள்வி வரலாம்.இது டி20 கிரிக்கெட் கிடையாது ஒருநாள் கிரிக்கெட் பிரசித் கிருஷ்ணா ஆடுகளங்களில் கூடுதலாக பவுன்சை உருவாக்கக் கூடியவராக இருக்கின்றார். மற்றபடி பேட்டிங் வரிசையில் எந்த ஒரு சிக்கலும் கிடையாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஸ்ரேயாஸ், கே எல் ராகுல் என ஐந்து பேர் பேட்டர்களாக இருப்பார்கள் ஆல்ரவுண்டராக நிதிஷ்குமார் இருப்பார் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, October 18, 2025, 17:40 [IST]
Other articles published on Oct 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+