For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS 1st T20 -தமிழக வீரர், சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு இல்லை..இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்

விசாகப்பட்டினம் : இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஐசிசி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு ஆஸ்திரேலியாவுடன் மீண்டும் புதிய வடிவத்தில் பல பரிட்சை நடத்துகிறது.

இதில் இறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் விதமாக இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 Ind vs Aus 1st t20 - Big advantage for india in the toss as star players missed out

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் போட்டியின் போது இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாகும். மேலும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இது இருக்கும்.

இதனால் ஆஸ்திரேலியா எந்த இலக்கை நிர்ணயிக்கிறார்களோ அதை துரத்துவதற்கு எளிதாக இருக்கும். உலக கோப்பையில் அடைந்த தோல்வி நிச்சயம் வேதனையை கொடுக்கும். அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் எப்போதுமே இருளுக்குப் பிறகு வெளிச்சம் நிச்சயம் இருக்கும். நாங்கள் பல நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம்.

இந்த தொடருக்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் இருந்தாலும், அனுபவம் நிறைந்த வீரராக இருக்கிறார்கள். இதனால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறேன் என்று சூரியகுமார் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய தாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம். பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அடுத்த உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்த போட்டிகளை நாங்கள் கருதுகிறோம் என்று கூறினார். இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ,சிவம் துபே, ஆவேஸ் கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Story first published: Thursday, November 23, 2023, 18:56 [IST]
Other articles published on Nov 23, 2023
English summary
Ind vs Aus 1st t20 - Big advantage for india in the toss as star players missed out IND vs AUS 1st T20 -தமிழக வீரர், சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு இல்லை..இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+