Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பந்தில் தவறு நடந்துவிட்டது.. சூர்யகுமார் சொன்னது வேறு, நான் செய்தது வேறு.. இஷான் கிஷன் பேச்சு

விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 29 ரன்களை கடைசி பந்து வரை சென்று வெற்றிகரமாக துரத்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது. இசான் கிஷன் மற்றும் சூரிய குமாரியாதவ் அபாரமாக விளையாடி அணியின் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Ind vs Aus 1st t20 - Ishan kishan says We will learn from the mistakes as a unit

குறிப்பாக இஷான் கிசன் உலகக்கோப்பை தொடரில் பெரும்பாலும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் முதல் டி20 யில் 39 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இஷான் கிஷன், எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் பந்து வீச்சிலும் கடும் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டோம்.

எனினும் முகேஷ் குமார் பந்துவீச்சில் கலக்கினார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். குறிப்பாக ரிங்கு சிங் தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே மிகப்பெரிய அணியை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடிவிட்டார். சூரியகுமார் யாதவுக்கு தான் முழு பாராட்டும் செல்ல வேண்டும். அவர் இந்த ஆட்டத்தில் விளையாடிய விதம் அசத்தலாக இருந்தது.

அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒவ்வொரு பௌலரையும் சிறப்பாக எதிர் கொண்டு அடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் 15 ரன்கள் வீதம் அடிக்க வேண்டும் என நினைத்தோம். நான் அவுட் ஆன பந்தில் ஒரு தவறு நடந்தது. ஏனென்றால் அந்த பந்தில் சூரியகுமார் யாதவ், என்னை சிங்கிள் தான் எடுக்க சொன்னார். ஆனால் நான் பெரிய ஷார்ட் அடித்து அவுட் ஆகி விட்டேன். நாங்கள் விளையாடும் போது எங்களுக்குள் இருந்த தொடர்பு சிறப்பாக இருந்தது. எங்களுடைய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் தவறு செய்வோம். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் வருவோம் என்று கூறினார்.

Story first published: Friday, November 24, 2023, 6:00 [IST]
Other articles published on Nov 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+