Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் தான் இனி விளையாடுவார்.. டிராவிட் எடுத்த தடாலடி முடிவு.. பின்னாடியே இருந்த ட்விஸ்ட்!

மும்பை: ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரை வைத்து ராகுல் டிராவிட் முக்கிய முடிவை எடுக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை சரி செய்யும் விதமாக இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மிக முக்கிய பிரச்சினையான தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் விவகாரத்தில் புதிய முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, தினேஷ் கார்த்திக் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாததால், இடதுகை பேட்டிங்கிற்கு ரிஷப் பண்ட் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். ஒரு இடதுகை பேட்ஸ்மேன் நிச்சயம் தேவை. ஆனால் அவர் சொதப்பி வருகிறார். மறுபுறம் தினேஷ் கார்த்திக் நிலையான ஃபினிஷராக இருந்து வருகிறார். கடைசி சில ஓவர்களில் இந்திய அணியின் ரன் ரேட்டை அதிகரிக்க தினேஷ் கார்த்திக் தேவைப்படுகிறார்.

புது முயற்சி

புது முயற்சி

எனவே இந்தியாவுக்கு தற்போது முதன்மை தேவையாக உள்ள ரிஷப் பண்ட்-ஐ ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தி பார்க்கவுள்ளனர். இதில் ஒருவேளை அவர் ஏமாற்றினால், பின்னர் ஒரே தீர்வாக தினேஷ் கார்த்திக்-ஐ மட்டுமே ப்ளேயிங் 11ல் சேர்க்க முடிவெடுத்துள்ளனர். ஒருவேளை பண்ட் தன்னை நிரூபித்துவிட்டால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும்.

 ஹூடாவுக்கும் இதே தான்

ஹூடாவுக்கும் இதே தான்

இதே போல தான் தீபக் ஹூடாவின் நிலைமையும். ஜடேஜாவின் இடத்தில் தற்போது ஒரே மாற்றாக இருப்பது அக்‌ஷர் பட்டேல் தான். எனவே முதல் சில போட்டிகளில் அக்‌ஷர் பட்டேலை பயன்படுத்தி பார்க்கவிருக்கின்றனர். ஒருவேளை அவர் ஃபார்மை நிரூபிக்கவில்லை என்றால் ஹூடாவின் மீது நம்பிக்கை வைத்து செல்வார்கள்.

Story first published: Tuesday, September 20, 2022, 17:36 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+