Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: முதல் டி20 போட்டி மழையால் ரத்து.. அதிரடியாக ரன் குவித்தும், 9.4 ஓவரிலேயே முடிந்த போட்டி

கான்பெரா: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழையால் பாதியிலே கைவிடப்பட்டது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கான்பெராவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் ஷர்மா வழக்கம் போல் அதிரடி காட்டி நான்கு பவுண்டரிகள் அடித்தார்.

Ind vs Aus

இதில் 14 பந்துகளில் அடித்து 19 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து கில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார். ஐந்து ஓவரில் இந்திய அணி நிறைவு செய்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதன் காரணமாக போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

இதில் சூரியகுமார் யாதவும் அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் அடித்தார். இதில் 24 பந்துகளில் 39 ரன்கள் அடங்கும். கில் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க இந்திய அணி 9.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு கட்டத்தில் வெற்றி தோல்வி இன்றி போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஹேசல்வுட் மூன்று ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சேவியர் இரண்டு ஓவர்களில் 16 ரன்களும், நாதன் எலிஸ் 1.4 ஓவரில் ஒரு விக்கெட் கொடுத்து 25 ரன்களும் விட்டுக் கொடுத்தார்.

மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு ஓவரில் 10 ரன்களும் இரண்டு ஓவரில் 22 ரன்களும் விட்டுக் கொடுத்தார்.டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை மெல்போர்னில் நடைபெறுகிறது. தற்போது எஞ்சி இருக்கும் நான்கு டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகள் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.

Story first published: Wednesday, October 29, 2025, 17:01 [IST]
Other articles published on Oct 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+