Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயந்துட்டீங்களா.. ! இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் அசுரன்.. ஆஸ்திரேலியா வெளியிட்ட வீடியோ

மும்பை : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலியா ஒரு அதி பயங்கரமான வீரரை களமிறக்க உள்ளது.இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

Recommended Video

T20 World Cup-ல் எந்த Team-க்கு வெற்றி கிடைக்கும்? - Coach Dr.Harrington

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் நடைபெறுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது.

2வது டி20 போட்டி வரும் 23ஆம் தேதியும், 25ஆம் தேதி கடைசி டி20 போட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் டேவிட் வார்னருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பலமான ஆஸி அணி

பலமான ஆஸி அணி

மேலும் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி பலம் குன்றியதாக கருதப்பட்டது. எனினும் பாட் கம்மின்ஸ், ஹேசல்வுட், ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதே போன்று ஜாஸ் இங்லீஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், மேத்தீவ் வெட் போன்ற வீரர்கள் உள்ளனர்.

டிம் டேவிட்

டிம் டேவிட்

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி, ஒரு அசுர பேட்ஸ்மேனை இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறக்க உள்ளது. ஆம், அது வேறு யாரும் இல்லை. சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் தான். இவர், முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டிம் டேவிட் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

பயிற்சி வீடியோ

பயிற்சி வீடியோ

இதில் டிம் டேவிட் வலைப்பயிற்சியில் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிடுகிறார். இதை பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. குறிப்பாக, சுழற்பந்துவீச்சுகளை தூக்கி சிக்சருக்கு விரட்டுவதில் டிம் டேவிட் கைத் தேர்ந்தவராக இருக்கிறார். இதனால், டிம் டேவிட்டை சமாளிக்க தனி திட்டத்தை வகுக்கும் நிலைக்கு ரோகித் தள்ளப்பட்டுள்ளார்.

16 சிக்சர்கள்

16 சிக்சர்கள்

டிம் டேவிட் இதுவரை 127 போட்டிகளில் விளையாடி 2725 ரன்களை குவித்துள்ளார். இதில் சராசரி 31 ஆகும். ஸ்ட்ரைக்ரேட் 163 என்ற அளவில் பயங்கரமாக உள்ளது. டிம் டேவிட்டை 8 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுத்தது. இதில் 8 போட்டியில் விளையாடி 186 ரன்களை டேவிட் விளாசினார். இதில் 16 சிக்சர்கள் அடங்கும்.

Story first published: Sunday, September 18, 2022, 19:09 [IST]
Other articles published on Sep 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+